பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma
தேவையான பொருட்கள்:

சிவப்பு காராமணி - 1 கப்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
 தக்காளி - 3
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள்  - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
கரம் மசாலா தூள்   - 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் -  2  ஸ்பூன்

செய்முறை:

காராமணியை 2  மணி நேரம்  ஊற வைத்து  ஊற வைத்துள்ள காராமணியை கழுவி, குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 3  விசில் விட்டு இறக்க வேண்டும்.

வெங்காயம் தக்காளியை தனிதனியாக  மிக்சியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.


பின்பு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அடுப்பை  சிம்மில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.


பின்னர் வேக வைத்துள்ள காராமணியை லேசாக மசித்து, கடாயில் ஊற்றி, சற்று கெட்டியான கிரேவி பதம் வந்ததும்  இறக்கினால் சுவையான பஞ்சாபி ஸ்டைல் காராமணி ரெசிபி ரெடி


https://goo.gl/kqZcjL






18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi

12 Jul 2017

கேரளா கடலை கறி|kerala kadala curry