சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu
தேவையானவை:

மட்டன்  - அரை கிலோ
சோயா உருண்டைகள் - 20
நறுக்கிய  வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் -  கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் -  2  ஸ்பூன்
மல்லித்தூள் - 2  ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -  2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்  -  4  ஸ்பூன்

தாளிக்க:

பட்டை - கிராம்பு - 1
சோம்பு -  கால் ஸ்பூன்

செய்முறை:

சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு பிழிந்து எடுக்கவும்.

மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து, அத்துடன் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து உப்பு சிறிது சேர்த்து வதக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.


அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து  மட்டன்  மற்றும் சோயா உருண்டை   சேர்த்து  தேவைாயன  அளவு  உப்பு   தண்ணீர்    சேர்த்து   நன்கு கலந்து குக்கரை மூடி வைத்து 5  விசில் வந்ததும் இறக்கி  மல்லி இலை தூவி பரிமாறவும்.


https://goo.gl/MEsn33


18 Nov 2018

மட்டன் எலும்பு சூப் | mutton elumbu soup in tamil

06 Jun 2018

மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai

11 Apr 2018

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu

06 Aug 2017

ஆட்டுக்கால் பாயா | attukal paya

08 Jan 2017

மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani

29 Nov 2016

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa

25 Oct 2016

மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval

11 Aug 2016

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna

10 Jun 2016

ஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops

12 Jul 2015

மட்டன் கோலா