அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil
அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்!

குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம்.

இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள்

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டி, தேன் சேர்த்து குடித்து வர வேண்டும். மேலும் இந்த நீரை தினமும் மூன்று முறை குடித்து வந்தால் அசிடிட்டியை குணமாக்கலாம்

இஞ்சியில் நிறைந்துள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அசிடிட்டி பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க உதவும். மேலும் இஞ்சி, வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமன்செய்யும்.

எனவே இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்தோ அல்லது இஞ்சியை உப்பில் தொட்டு வாயில் போட்டு மென்று வர வேண்டும். இதன் மூலம் அசிடிட்டியை குணமாக்கலாம்


 மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி, அசிடிட்டியை மட்டுமின்றி, குமட்டல் மற்றும் வாய்வு தொல்லையில் இருந்தும் நிவாரணம் தரும். அதற்கு தினமும் துளசியை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது அதனைக் கொண்டு டீ தயாரித்து தேன் கலந்து குடிக்கலாம்.


தினமும் உணவை உட்ககொண்ட பின்னர், ஒரு சிறு துண்டு வெல்லத்தை வாயில் போட்டு சாப்பிட்டு வந்தால், அது அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தோர் குடித்து வந்தால், அதில் உள்ள லாக்டிக் ஆசிட், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.


அதிலும் மோருடன் சிறிது மிளகு மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கொண்டால், இன்னும் நல்லது.


மோரில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.


காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும்.

வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும்.

மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.


மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.

மோரில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.

தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், விட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.











09 Jun 2018

அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil

28 May 2018

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil

27 May 2018

பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்

21 May 2018

நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்

21 May 2018

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

16 Apr 2018

உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்

14 Apr 2018

ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்

12 Apr 2018

குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்

09 Apr 2018

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol

01 Mar 2018

உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet