ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை  குணமாக்கும்  பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும்   பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம்.

ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது.

பல்வேறு நோய்களை போக்கும் நோய் நீக்கியாக விளங்குகிறது. குறிப்பாக பெண் மலட்டுத்தன்மைக்கு கைகண்ட மருந்தாகிறது. சர்க்கரைநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும் பாகற்காய் நாள்பட்ட கழிச்சலை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை சீராக்கும்.

பாகற் இலையை பயன்படுத்தி சர்க்கரை நோயை தணிக்கும் மருத்துவம்

இதற்கு தேவையானவை: பாகற் இலை சாறு, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள்பொடி. செய்முறை: 100மில்லி அளவு பாகற்இலை சாறு எடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள்பொடி, பெருங்காயதூள், வெந்தயப்பொடி சேர்த்து கலக்கி தினமும் காலையில் குடித்துவர படிப்படியாக சர்க்கரை நோய் குறையத்துவங்கும்.


பாகற்காய் “ஜூஸ்” குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும்., எனவே பசியும் அதிகரிக்கும். கணைய  புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும்  ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.


பாகற்காயில் “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை  பாதுகாக்கும்.

பாகற்காய் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும்  உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
மலச்சிக்கல், மூலம் மற்றும் வயிற்று புழுக்களை போக்கும் மருத்துவம்

தேவையான பொருட்கள்: பாகற்காய் சாறு, கடுக்காய் பொடி, சமையல் உப்பு. செய்முறை: பாகற்காய் சாறில் இரண்டு சிட்டிகை சமையல் உப்பு, அரை தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து கலக்கி தினமும் படுக்கப்போகும் முன்பு குடித்துவர  தொடர்ந்துமலச்சிக்கல், மூலம் மற்றும் வயிற்று புழுக்களை  பிரச்னைகளுக்கு எளிய தீர்வு கிடைக்கும்.
https://goo.gl/pEyoVQ










09 Jun 2018

அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil

28 May 2018

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil

27 May 2018

பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்

21 May 2018

நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்

21 May 2018

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

16 Apr 2018

உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்

14 Apr 2018

ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்

12 Apr 2018

குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்

09 Apr 2018

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol

01 Mar 2018

உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet