இயற்கை முறையில் முடி கொட்டுவதை தடுத்து முடி  வளர செய்யும் சில வழிகள்
இயற்கை முறையில்    முடி வளர்வதற்கான   சில வழிகள்
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றி, அத்துடன் வெந்தயத்தை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி, அந்த எண்ணெயை தொடர்ச்சியாக தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.


நெல்லிக்காய் கையளவு செம்பருத்தி இலை -5-6 தேங்காய் எண்ணெய் - 1 கப்

எண்ணெயை சூடுபடுத்துங்கள். நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலையை பொடியாக நறுக்கி அவற்றை எண்ணெயில் போடுங்கள். 20 நிமிடம் குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தியபின் அடுப்பை அணைத்து ஆற விடுங்கள்.

எண்ணெய் ஆறிய பின் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 தினமும் இதனை தடவிக் கொள்ளுங்கள். ஒரு மாதத்தில் மிக அடர்த்தியாக முடி வளரும்.  

பூண்டு பற்களை தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் அந்த எண்ணெயால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வர, தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, வழுக்கை ஏற்படுவதும் தடுக்கப்படும்.

செம்பருத்தி பூக்களை அரைத்து நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கலந்து, அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி தடவி சில மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் முடி உதிர்வது குறைவதோடு, நரைமுடியும் தடுக்கப்படும்.

https://goo.gl/Qbtgwi










09 Apr 2018

அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்

13 Mar 2018

கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips

02 Mar 2018

அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms

08 Feb 2018

முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil

06 Dec 2017

முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil

04 Dec 2017

குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips

01 Dec 2017

ஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க | kalluthu karumai neenga

10 Nov 2017

தலைமுடி அடர்த்தியாக வளர ஹெர்பல் எண்ணெய்/ Herbal Hair Oil for Hair Darkening and Hair Growth

06 Nov 2017

தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam

23 Oct 2017

உடல் எடையை வேகமாக குறைக்க தேன்| udal edai kuraiya honey