இறால் பிரியாணி
தேவையான பொருள்கள்:இறால் - கால் கிலோ
அரிசி - அரை கிலோ
எண்ணை - 150 கிராம்
டால்டா - ஸ்பூன்
நெய் - ஒரு ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 4
பச்ச மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞசள் - கால் ஸ்பூன்
உப்பு - தே.அளவு
எலுமிச்சை - ஒன்று
கொத்துமல்லி தழை - கால்கட்டு
புதினா - ஒரு கொத்து
பட்டை,ஏலம்,கிராம்பு - தலா ஒன்று
சிகப்பு கலர் பொடி - ஒரு பின்ச்

செய்முறை:

எண்ணையை காய வைத்து பட்டை,கிரம்பு , ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு நல்லவதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் வைக்க வேண்டும்.

பிறகு கொத்து மல்லி புதினா, தக்காளி , பச்ச மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேகவிடவேண்டும்.

தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேகவிடவும்.

இப்போது அரிசியை முக்கால் வேக்காடில் வேக விட்டு அதில் அரைதேக்கரண்டி எண்ணை, எலுமிச்சை சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள கூட்டில் கொட்டவேண்டும்.

கொட்டி தம்மில் விடவேண்டும் தம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விடவேண்டும்.

சிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்பு கலர் பொடியை கரைத்து மேலே தூவினால் போல ஊற்றி நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் விட வேண்டும்.
https://goo.gl/aVd4Xo


06 Aug 2017

ஆட்டுக்கால் பாயா | attukal paya

08 Jan 2017

மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani

29 Nov 2016

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa

25 Oct 2016

மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval

11 Aug 2016

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna

10 Jun 2016

ஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops

12 Jul 2015

மட்டன் கோலா

12 Feb 2015

மட்டன் சாப்ஸ்

05 Jan 2015

மட்டன் கடாய்

02 Sep 2014

எலும்பு சூப்