உங்க குழந்தை ஸ்லிம்மாக இருக்கனுமா?

இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட்டு, சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள். அதே சமயம் இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்து, காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால், இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்தாலும், குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை. அதே சமயம், இரவு உணவு முடிந்த பிறகு அதிக நேரம் கண்விழித்திருக்கும் குழந்தை உறங்கும் முன்பு ஏற்படும் பசி காரணமாக ஏதேனும் ஒரு நொறுக்குத் தீணியை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் காலையில் தாமதமாக எழுவதால், பகல் பொழுதில் இவர்கள் முழித்திருக்கும் நேரம் குறைவதால் விளையாடும் நேரமும் குறைகிறது. இதனால் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதாவது, சீக்கிரம் தூங்கச் சென்று, சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கும், தாமதமாக தூங்கச் சென்று காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளும் ஒரே அளவில்தான் தூங்குகிறார்கள் என்றாலும், தாமதமாகத் தூங்கச் செல்லும் குழந்தைகளின் உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் உடல் பருமனுக்குக் காரணமாக அமைகிறது.
மேலும், மிகக் குறைவான உறக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஏராளமான உடல் பிரச்சினைகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டுச் சூழல் தான் குழந்தைகளின் உறக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. பெற்றோர் சரியான நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கடைபிடித்தால் குழந்தைகளும் சரியான நேரத்தில் தூங்குவார்கள். எனவே குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கமும் இன்றியமையாதது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

Related :
குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments
குழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி ...
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்
குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. குழந்தையிடம், “ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் ...
குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
குழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது. இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விஷமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒரு வித ...
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்
* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய ...
குழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் ...
குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்
குழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.குழந்தை ...
டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்
வளர்ந்து வரும் குழந்தைகள் `டீன் ஏஜ்' பருவத்தை அடையும்போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ...
குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
உங்கள் செல்ல மழலைகள் உங்களை நம்பித்தான் இருக்கிறது. அவர்களை கவனமாக பராமரிப்பது உங்கள் கடமை. குழந்தைகளை குளிப்பாட்டுவது எப்படி?தினசரி குழந்தையை குளிப்பாட்டலாம் குழந்தையை குளிக்க வைக்க முடியாத ...
குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?
முதல்வருடம் சராசரியாக ஒரு குழந்தை ஐந்து முறை சளி இருமல் நோயால் பாதிக்கப்படும். முதல் இரண்டு மாதங்கள் சளி நோயால் பாதிக்கப்பட்டால். நோயின் தீவிரம் அதிகமாக இருக்கலாம்சளி ...
குழந்தையின் வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு நோய் நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் நோய் வளரும் நாட்களில் பத்தில் ஒரு குழந்தை வயிற்றுப்போக்கு நோயினால் மரணம் அடைகின்றன். 60-70% வயிற்றுப்போக்கு நோய் இறப்பிற்கு ...