உடலில் உள்ள இரத்தத்தை    சுத்தமாக்கும்  இயற்கை உணவுகள்
உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவு மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். பீட்ரூட் சாப்பிட்டு வந்தால், புதிய ரத்தம் ஊறும். செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.


முருங்கை கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டுக் கிளறி, நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். நாவல் பழத்தினை தினமும் சாப்பிட்டால் கூட ரத்தம் விருத்தியாகும்.

இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் கூட ரத்தத்தை சுத்தமாக்கும். . இலந்தைப்பழம் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமின்றி சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதோடு, பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்து விடலாம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால், இது ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை ஊறவைத்து குடித்து வந்தால் போதும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் என்கிறது, இயற்கை வைத்தியம். ஒரு தம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் சீர்படும்.


உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகும்.  
  இயற்கை உணவு  முறைகளை  பின்பற்றி  மருத்துவமனைகளுக்குச் செல்வதை தவிர்த்து விடலாம்.01 Mar 2018

உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet

20 Feb 2018

மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்

08 Feb 2018

குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் | best foods to prevent stomach cancer

19 Dec 2017

தூதுவளை இலையின் மருத்துவ குணங்கள் | Thoothuvalai Benefits and Medicinal Uses

12 Dec 2017

பெண்கள் கட்டாயம் சாப்பிட கூடிய உணவு வகைகள் healthy foods every woman must eat

04 Dec 2017

அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் சீரக தண்ணீர் | Best Benefits and Uses Of Cumin Water

14 Nov 2017

மழைக்காலங்களில் ஜலதோ‌ஷத்தை குணமாக்கும் இயற்கை வழிகள்| cold treatment in tamil language

09 Nov 2017

தலைசுற்றலை நீக்கும் ஏலக்காயின் மருத்துவ குணங்கள்| Best Benefits and Uses Of Green Cardamom

08 Aug 2017

கறிவேப்பிலை டீ | curry leaves tea

04 Aug 2017

அல்சர் வயிற்றுபுண் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil