என்றும் இளமையுடனும் புத்துணர்ச்சியுடன் இருக்க இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger

நெல்லிக்காய் - வைட்டமின்-சி நிறைந்த நெல்லிக்காயை பச்சையாக மென்று தின்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.
நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் தாதுச்சத்துகள் அடங்கியிருப்பதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கும். உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் நெல்லிக்காய்ச் சாற்றுடன் இஞ்சிச் சாறு சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், கொழுப்பு கரையும். தேனில் ஊறவைத்த இஞ்சியை மென்று தின்பதால், செரிமானக் கோளாறு மற்றும் பல பிரச்னைகள் சரியாகும்.
குடைமிளகாய்:
குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளது. குடை மிளகாய்கள் பல வண்ணங்களில் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகளும், பீட்டா கரோட்டீனும் அதிகம் உள்ளன.
சப்போட்டாப் பழம்
சப்போட்டாப் பழம் சாப்பிட்டுவந்தால் இளமைக்கு கியாரன்டி. தினமும் இரண்டு சப்போட்டாப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரக்கூடியது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு சப்போட்டா அருமையான மருந்தாகும். மேலும் இது இதயக்கோளாறு ஏற்படாமல் தடுக்கும்; சருமத்தை மிருதுவாக்கும்.
தக்காளி:
தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.
பழங்கள்
ஆப்பிள், மாதுளை, கேரட், சீத்தாப்பழம், மங்கூஸ், ஸ்ட்ராபெர்ரி, முந்திரி, வெள்ளரி விதைகள், பூசணி விதைகள், சிவப்பு திராட்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, பசலைக்கீரை, பீன்ஸ் உள்ளிட்ட உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
முருங்கைக்கீரை மட்டுமல்லாமல் தினமும் ஒரு கீரை உணவு, முருங்கைக்காய் போன்றவற்றை உண்பது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளை உண்பது நல்லது.
சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை உண்மையிலேயே பெண்களுக்குக் கடவுள் கொடுத்த ஒரு வரம். தினமும் காலை வெறும் வயிற்றில் சோற்றுக்கற்றாழை சாப்பிட்டு வந்தால், இளமை என்றும் ஊஞ்சலாடும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கச்செய்யும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம். எலுமிச்சைச் சாறு, அறுகம்புல் சாறு போன்றவையும் இளமை காக்கும் அற்புத மருந்துகளாகும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர் களுக்குப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள்கூட குறையும்
வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும்.
அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் ஈடுபடலாம். காலை வேளையில் சுத்தமான காற்றைச் சுவாசிக்கும்போது, சுகமான காற்று முகத்தில் படும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.
பிறகு, அரை மணி நேரம் கழித்து சூடான ஆரோக்கிய பானம் எதையாவது பருகலாம். காலை வேளை உணவைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். மதியம், இரவு உணவுகளையும் நேரந்தவறாமல் சாப்பிட வேண்டும். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை, அளவோடு சாப்பிடுவது நல்லது.
இவை எல்லாவற்றையும் பின்பற்றினால் நீங்கள் என்றும் இளமையுடனும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.
Related :
மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்
உங்கள் மாதவிலக்கிற்கும் எடைக்கும் சம்பந்தம் உள்ளது. அதிக எடை முறையான மாதவிலக்கினை பாதிக்கும். ஆரோக்கியமான நார்சத்து மிகுந்த உணவினை உட்கொள்ளுங்கள். இது எடையை சீராய் வைக்கும். மலச்சிக்கலை ...
கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் |carrot juice benefits in tamil
கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடீன், பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுத்து, நல்ல பாதுகாப்பு வழங்கும். கேரட் ஜூஸ் சாறு எடுத்து தேனுடன் ...
நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக்கீரை | vendhaya keerai benefits in tamil
வெந்தயத்தை சமையலுக்கு தினமும் பயன்படுத்துகிறோம். இட்லி தோசைக்கு மாவாட்டுகையில் சிறிதளவு வெந்தயத்தை போடுவது வழக்கம். ஆனால் வெந்தயக்கீரையை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. சாதராண மண் தரையில் வெந்தயத்தை ...
கோடை கால வெப்பத்திலிருந்து தப்பிக்க கிர்ணி பழம் சாப்பிடுங்க
கடுமையாக வாட்டி வதைக்கும் கோடை காலங்களில் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். அப்படியான பழ வகைகளில் ஒன்றுதான் முலாம்பழம். இந்த முலாம் பழம் சாப்பிடுவதால் நமக்கு ...
குறைவான விலையில் நிறைவான பலன் தரும் தர்பூசணி பழத்தின் பயன்கள்
மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். ...
தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம்.வயிற்று ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும்.துரித உணவுகளால் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வராமலும் ...
வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் / venthayam benefits in tamil
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், ...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது அவை ஒத்து கொ ள்ளாமல் சிலர் ஜலதோசம்,மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்புதன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். ...
சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
சுளுக்கு குணமாக வெள்ளைப் பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவிவர சுளுக்கு குணமாகும்.சுளுக்கு குணமாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் வெந்நீர்விட்டு அரைத்து ...
உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
இளநீர் உடலைக் குளிர்ச்சியாக்குகிறது. வேர்குரு, சின்னம்மை, பெரியம்மை வியாதியைக் கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை மாற்றுகிறது. வயிற்றுப் போக்கு, காலராவைக் கட்டுப்படுத்துவதுடன் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட வைக்கிறது. ...