காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடிக்கிறோம். அதற்கு பதிலாக ஒரு கப் சுடுதண்ணீருடன் அன்றைய நாளைத் துவங்கினால் மிக சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.

தினமும் அதிகாலையில் சுடுதண்ணீர் குடிப்பதால் உடலிலும் சருமத்திலும் ஆரோக்கியமான மாற்றங்கள் நிறைய உண்டாகின்றன.
இரவு உணவை எப்போதும் லைட்டாக சாப்பிட வேண்டும்.

ஆனால் பலர் கண்ட உணவுகளையும் இரவில் சாப்பிடுகிறார்கள். இதனால் காலையில் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். சிலருக்கு டீ, காபி குடித்தால்தான் மலம் கழிக்கும் எண்ணம் வருவது, அந்த பானங்களில் உள்ள வெப்பம் தான் காரணம்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும்.

வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.


உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் குடித்தால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வென்னீர் குடித்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

மாதவிடாய் காலங்களில் வயிறு வலி அதிகமாக இருக்கும் போது, வெறும் வயிற்றில் சுடுநீர் அருந்தினால் வலி சற்று மந்தப்படும். காலை வெறும் வயிற்றில் சுடுநீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமானம் மேம்படுவதோடு இளமையான தோற்றம் கிடைக்கும்.






17 Jun 2019

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும் தேங்காய் பால்

06 Feb 2019

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

31 Jan 2019

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil

01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்