samayalkurippu logo

கீழா நெல்லி மருத்துவ குணம் ,keelanelli meditional plant

கீழா,,,நெல்லி,,,மருத்துவ,,,குணம் keelanelli,,,meditional,,,plant ,கீழா,நெல்லி,மருத்துவ,குணம் ,keelanelli,meditional,plantVeg,non-veg,cookery




கீழா நெல்லி மருத்துவ குணம்

Monday , 19th August 2013 10:27:51 AM

கீழா நெல்லி மருத்துவ குணம்
,keelanelli meditional plant  கீழாநெல்லி இலை, கரிசாலங்கண்ணி இலை, தும்பை இலை மூன்றும் சம அளவு எடுத்து அம்மியில் அரைத்துக் காய்ச்சிய பசும் பாலில் பெரியவர்களுக்குப், சிறியவர்களுக்கு, குழந்தைகளுக்குச்  காலையில் மட்டும் ஒரு வாரம் முதல் 10 நாள் தரவும்.

* உணவு காரம், புளி நீக்கி பால் சாதம், மோர் அரை உப்பு ( வறுத்தது) சேர்த்துக் கொள்ளவும்.

* காமாலை ரோகம் கூண்டோடு நீங்கும். பெண்களுக்குக் காணும் பெரும்பாடு, வெள்ளை படுதல், மாதவிலக்கு தாமதமாகவோ, அடிக்கடி காண்பதோ போன்ற கருப்பை ரோகங்களுக்குக் கீழாநெல்லி வேர், அசோக மரப்பட்டை, அத்தி மரப்பட்டை இவை மூன்றும் சம அளவு எடுத்து உலர்த்தி, இடித்து காலை மாலை ஒரு ஸ்பூன் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட நோய்கள் குணமாகிவிடும்.

* கீழாநெல்லி சமூலத்தை மட்டும் அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு பிரமாணம் காய்ச்சிய பசுவின் பாலில் கலக்கிச் சாப்பிட்டுவர சோகை, காமாலை பாண்டு, வாதபித்த ரோகங்கள் குணமாகும். இரத்தம் அதிகப்படும். கண் குளிரும்.

* கல்லீரல் பழுதடைந்த பாண்டு, சோகை, ரத்தமில்லாமல் வெளுத்துப்போன உடம்புகளுக்குக் கீழாநெல்லியும், கரிசலாங்கண்ணியும் சமமாகச் சேர்த்து காலை மாலை நெல்லி அளவு பசும்பாலில் கலந்து 48 நாள் கொடுக்க நல்ல குணமாகும்.

 கீநெல்லி தைலம்:

* உலர்ந்த கீழாநெல்லிச் சமூலம் சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு 4 படி தண்ணீ ர் விட்டு சுண்டக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

* கடுக்காய்த் தோல், வேப்பம் பிசின் ஆகியவற்றை  அம்மியில் வைத்துப் பசும்பால் விட்டு அரைத்து, முன் சுத்தப்படுத்திய கஷாயத்தில் கலக்கி, 1 லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி அதில் நாட்டுச் சர்க்கரையைத் தூவிச் கிளறிக் கீழ் இறக்கி ஆறவிடவும்.

* இந்த தைலத்தை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துத் தலைமுழுகி வர, பித்தக் கிறுகிறுப்பு, வாயில் நீர் ஊறல், கை, கால் எரிச்சல், கண் எரிச்சல், பித்தப்பயித்தியம் எல்லாம் குணமாகும்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in