குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.comகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்
குழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

குழந்தை தினமும் காலை எழுந்ததும் மெல்லிய மஸ்ஸின் துணியைத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை மெதுவாக சுத்தம் செய்துவிட வேண்டும். முடிந்தால் இரவு பால் குடித்ததும் இதே போல செய்து, தூங்க வைக்கலாம். ஒரு வயது வரை இதைத் தொடர வேண்டும்.

பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் தருணங்களில் ஈறுகள் நமநமவென்று இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இது சகஜம் தான். எனவே குழப்பம், அச்சமின்றி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

பற்கள் வளர ஆரம்பிக்கும் போது கேரட், ஆப்பிள் போன்றவற்றை துண்டுகளாக்கி கடித்து சாப்பிட பழக்க, அது பற்களை வலுவாக்கும்

1 வயதாகும்போது ப்ளூரைட் குறைந்த பற்பசையை உபயோகிக்க வேண்டும்

மேல் பற்கள், கீழ் பற்கள், கடைவாய் பற்கள், பற்களின் உள், வெளி சுற்றுப்பகுதி என்று அனைத்துப் பகுதிகளையும் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்த குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள்.
காலை, இரவு என்று முறை பல் துலக்குவதை பெரியவர்களும் கடைபிடித்து, குழந்தைக்கும் கற்றுக்கொடுங்கள்.

பற்களில் ஓட்டக்கூடிய இனிப்பு வகைகள் மற்றும் கேஸ் நிறைந்த சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்குப் பழக்காமல் இருப்பதே நல்லது.

இவை பற்களில் படியும்போது, வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் இனிப்புகளைச் சிதைக்க ஆரம்பிக்கும்.

சாக்லேட், கூல் டிரிங்க்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகள் என்றால், அவற்றை சாப்பிட்டு முடித்ததும் உடனடியாக பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை கட்டாயமாக்குங்கள். நாக்கு சுத்தப்படுத்துவதும் மிக முக்கியமானது. நாக்கை தினம் ஒரு முறை ‘டங்க் க்ளீனர்’ கொண்டு மென்மையாக சுத்தப்படுத்துங்கள்.

குழந்தையை வருடம் ஒரு முறை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, பற்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

விளையாடும் போது குழந்தைகள், பல்லை உடைத்துக் கொள்வது சகஜம்தான். அப்படியான சந்தர்ப்பங்களில் உடனே உடைந்த பல்லை எடுத்து பாலில் போட்டுவைத்து, தாமதிக்காமல் பல் மருத்துவரிடம் செல்லுங்கள். நிச்சயம் அந்த பல்லை உடைந்த பல்லோடு ஒட்ட வைத்துவிட முடியும். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும்

பல்லில் கறுப்பா ஏதாவது இருந்தால், அதுதான் பற்சொத்தைக்கான முதல் அறிகுறி. ஆரம்ப கட்டத்திலேயே சொத்தையை சுத்தம் செய்து, அந்தப் பகுதியை அடைத்துவிட வேண்டும்14 Nov 2017

குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments

29 Nov 2016

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்

18 Oct 2016

குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்

22 Aug 2016

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்

09 Mar 2014

குழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்

02 Feb 2014

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்

09 Jul 2013

டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்

26 Jun 2012

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

24 Jun 2012

குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?

24 Jun 2012

குழந்தையின் வயிற்றுப்போக்கு