கேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry
தேவையான பொருள்கள்

சிக்கன் - அரை கிலோ
சோம்பு  -  1  ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் -  7
பூண்டு -  10 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்

செய்முறை

முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி  நன்கு கழுவி வைத்து கொள்ளவும்


பின்பு  மிக்ஸியில்  காய்நத  மிளகாய், சோம்பு , பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.


கழுவி வைத்துள்ள சிக்கனுடன்   அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம்  ஊற வைக்க வேண்டும்.

பின்பு  கடாயை அடுப்பில் வைத்து,  தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து   நன்கு  பிரட்டி   1 டம்ளர்   தண்ணீர்   ஊற்றி   நன்கு   வேக  வைக்கவும்.  

தண்ணீர்   முற்றிலும்   வற்றி   சிக்கன்   நன்கு  வெந்தவுடன்   இறக்கவும்.  கேரளா ஸ்டைல் சிக்கன்  வறுவல்   ரெடி
https://goo.gl/wZJ5zA


03 Jan 2018

டிராகன் சிக்கன் | Dragon chicken

20 Nov 2017

கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry

22 Aug 2017

மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy

17 Jul 2017

சிக்கன் வடை | chicken vadai

19 Jun 2017

கோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry

14 May 2017

மொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken

25 Feb 2017

நாட்டு கோழிச்சாறு | nattu kozhi charu

18 Oct 2016

கேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry

17 Sep 2016

நாட்டுகோழி சுக்கா / Nattu Kozhi sukka

19 Jul 2016

செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval