கோடை வெயிலில்   இருந்து தப்பிக்க   சாப்பிடும் உணவு முறைகள்
கோடை வெயிலால் ஏற்படும் நோய்களில் இருந்து செலவில்லாமல் தப்ப பல எளிய வழிமுறைகள் பல உள்ளன

கோடை வெயில் நேரத்தில் பிரிட்ஜில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைபருகக்கூடாது. இதற்குப் பதிலாக மண் பானையில் சுத்தமான தண்ணீரை நிரப்பி இதை அதிகம் பருக வேண்டும்.

இதனால் உடல்சூடு தணிவதுடன் பித்தம் மட்டுப்படுத்தப்படும். வழக்கமாக பருகும் தண்ணீரின் அளவை விட கூடுதலாக இரண்டு மடங்கு பருக வேண்டும்.

வெளியிடங்களுக்கு செல்லும் போதும் நன்னாரி குளிர் நீரை எடுத்துச் சென்று அருந்த வேண்டும்.


வியர்வையால் தோல்களில் வியர்க்குரு உள்ளிட்ட சருமநோய்கள் ஏற்படும். இதை தவிர்க்க அருகம்புல் சாறு எடுத்து சமளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தைலம் தயாரித்து உடலில் பூசலாம். உணவில் ஜீரகம், காய்கள், கனி வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

உடல் சூட்டால் ஏற்படும் மூல நோய் தவிர்க்க அதிக தண்ணீர் பருகுவதுடன் எலுமிச்சை ஜூஸ் பருக வேண்டும். நீரிழிவு வியாதி இருப்பவர்கள் எலுமிச்சையில் சர்க்கரைக்குப் பதில் உப்பு சேர்த்து பருகலாம். நார்ச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.  காரமான உணவுகளை குறைக்க வேண்டும்.

தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு என பழங்களை சாப்பிடுங்கள்.

வெள்ளரி, கோஸ், பூசணி, வாழைத்தண்டு, கேரட், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை இவைகளை ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். இவை உங்களை கோடைக்காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.


தக்காளியும், மாதுளையும், நெல்லியும் கோடைக்காலத்திற்கு கண்கண்ட அமிர்தம் என்பதால் இதனை தினமும் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.


நிறைய நீர், மோர் குடியுங்கள்.

சாலட் எனப்படும் பச்சை காய்கறி கலவையை சின்ன வெங்காயம் சேர்த்து தினமும் இரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிக வியர்வை ஏற்படும் நேரங்களில் கூடுதலாக தண்ணீர் பருகி உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றாக கடைந்த மோர், சிறிய வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். செரிமான சக்தி குறைவாக உள்ள திட மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து நீர் சத்துள்ள உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும்.

https://goo.gl/F9dCQM






18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

09 Jul 2018

வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses

05 Jul 2018

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

28 Jun 2018

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்

28 Jun 2018

சர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies

09 Jun 2018

அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil

28 May 2018

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil

27 May 2018

பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்

21 May 2018

நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்

21 May 2018

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்