கோடை கால சரும  பாதுகாப்புக்கும் பளபளப்புக்கும்    ஆலிவ் எண்ணெய் | Summer Skin Care Tips with Olive Oil
கோடை வெயிலில்   சருமத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.


ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.


அதனை தேய்த்து குளிப்பதால் சருமம் வழவழப்பாகவும், எண்ணெய்ப் பசையுடனும் பொலிவாக இருக்கும்.


கோடைக்காலத்தில் உடலில் உள்ள பழைய செல்கள் உதிர்வது வழக்கத்தைவிட அதிகரிக்கும்.

 ஆலிவ் ஆயிலை முகத்தில் தேய்த்து வந்தால் இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும். புதிய செல்களுக்கு புத்துணர்வும் கிடைக்கும்.


ஆலிவ் ஆயில் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை வறண்டு விடாமல் பாதுகாக்கும் தன்மை உடையது. முகம் மட்டுமின்றி உடலிலும் தடவி வரலாம். அது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

ஆலிவ் எண்ணெயை கண்களை சுற்றியுள்ள கரு வளையங்கள், சுருக்கங்களை போக்குவதற்கு பயன்படுத்தலாம்.

 சிறிய பஞ்சில் ஆலிவ் ஆயில் சில துளிகள் எடுத்து கண்களை சுற்றி தேய்த்து வரலாம். அது கண்களுக்கு புத்துணர்வை கொடுக்கும்.


 உடல் முழுவதும் ஆலிவ் ஆயிலை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். தண்ணீரில் சில துளிகள் ஆலிவ் ஆயிலை கலந்தும் குளித்து வரலாம்.


அவ்வாறு செய்து வந்தால் சருமம் மென்மையாகவும், புதுப்பொலிவுடனும் காட்சியளிக்கும்.

விரல் நகங்களும், அதனை சுற்றியுள்ள சதைப்பகுதியும் வறண்டு காட்சி அளித்தால் ஆலிவ் ஆயிலை சில துளிகள் தேய்த்து வரலாம். நகங்கள் பளபளக்க தொடங்கும்.

 ஆலிவ் ஆயிலை கால்கள், மூட்டு பகுதிகளில் தேய்த்து வந்தால் எலும்புகள் வலுவாகும்.

 இதனை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தலும் அடர்த்தியாக காட்சியளிக்கும். ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும்முன்பு கூந்தலை நன்றாக ஷாம்பு போட்டு தண்ணீரில் அலச வேண்டும்.

பின்னர் ஆலிவ் ஆயிலை தண்ணீரில் கலந்து கூந்தலின் மயிர்க்கால் களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

https://goo.gl/qA5xs8






19 Sep 2018

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்

14 Sep 2018

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்

02 Aug 2018

வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு

31 Jul 2018

கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips

23 Jul 2018

முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil

19 Jul 2018

முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness

17 Jul 2018

உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்

10 Jul 2018

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips

05 Jul 2018

பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil

27 Jun 2018

முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal