சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகள்

கேசரி செய்யும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைப் போட்டு விட்டால்  சுவை கூடுதலாக இருக்கும்.

* இட்லி மாவு கரைத்ததும் அதில்  சிறிது சர்க்கரையைத் தூவி வைத்துவிட்டால் அதிகம் புளிக்காமல் இருக்கும். இட்லி, தோசை சுவையாகவும் இருக்கும்.

* பாசிப்பருப்பை லேசாக வறுத்து விட்டுப் பின்னர் பொங்கல் செய்தால் ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.

* மஞ்சளுடன் வேப்பிலை அரைத்து புண்களின் மீது தடவிவர ஆறாத புண்களும் ஆறும்.

* செம்பருத்திப் பூவை தண்ணீ ர் விட்டுக் காய்ச்சி சிறிது தேன்விட்டுக் கஷாயமாகக் செய்து சாப்பிட்டால் நெஞ்சு வலியும், நெஞ்சு அடைப்பும் நீங்கிவிடும்.

* தக்காளிப் பழத்தை ஜீஸ் செய்து அத்துடன் தேன் கலந்து பருகி வந்தால் இரும்புச்சத்தும், வைட்டமின் 'சி' சத்தும் ஏராளமாகக்  கிடைக்கிறது.

* புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளிக்காய்ச்சல் குணமாகும்.

* சீத்தாப்பழம் உண்பதால் இருதயம் வலுப்பெறும். உடல் பருமனாகும்.

*சீடை, தடடை, முறுக்கு செய்யும் போது சிறிது தேங்காய்பால் விட்டுச் செய்வதால் சவை கூடும்.

* கடுகெண்ணெயைச் சுட வைத்து இடுப்பில் தடவி உருவி விட்டால் இடுப்புவலி மறைந்து போகும்.

* மிஷினில் அரைத்த அரிசிமாவில் சிறிது பாலையும், நீரையும் தெளித்துப் பிசிறி வைத்துவிட்டு, பிறகு வெல்லப்பாகை விட்டால் அதிரசம் நன்றாக வரும்.  
 

https://goo.gl/7NQKX2
adresponsive_1


சமையல் குறிப்புகள்
01 Jul 2014

சின்னம்மை வடு மறைய

சமையல் குறிப்புகள்
02 Mar 2014

பீரியட்ஸ் வலி குறைய

சமையல் குறிப்புகள்
02 Mar 2014

தயிர், மோரை எப்படி சாப்பிடலாம்

சமையல் குறிப்புகள்
24 Jul 2013

சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகள்
14 Jul 2011

குழந்தையின் மலச்சிக்கல் தீர
adresponsive_4