சம்பா ரவை  கிச்சடி
தேவையான பொருள்கள்

சம்பா ரவை - 1/2 கப்,
பச்சை பட்டாணி - 1/2 கப்,
கேரட் - 1 (நறுக்கியது),
வெங்காயம் - 1 (நறுக்கியது),
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி - 1/2 டீஸ்பூன் (துருவியது),
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது),
தண்ணீர் - 3 கப்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை
முதலில் சம்பா ரவையை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின்னர் 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில்  ரவையைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு துருவிய  இஞ்சியை சேர்த்து கிளறி, பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து, பிரட்டி 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு அத்துடன் சம்பா ரவையை சேர்த்து, 1  கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு, இறக்க வேண்டும். பின் குக்கரை திறந்து, அதன் மேல்  கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
https://goo.gl/YebX2K


27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati

30 Jun 2017

சில்லி ப்ரெட் | chilli bread recipe

22 May 2017

ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa

04 Jan 2017

கேரட் ரவா இட்லி|carrot rava idli