சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாக கிழங்குகள் சாப்பிடக் கூடாது. குண்டாகிவிடுவோம் என்று நீங்கள் கேள்விப்படுவதுண்டு. உண்மையில் இதில் சர்க்கரை வள்ளி கிழங்கு விதி விலக்கு.

இதன் சுவை அபாரம். இனிப்பாகவும், வாசனையுடன் இருக்கும் இதனை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். அதோடு அதில் சத்துக்களும் அதிகம் உள்ளது.


விட்டமின் ஏ, பி, சி, இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் இதில் அதிக அளவில் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.


எல்லா கிழங்கு வகைகளிலும் கொழுப்பு சத்துகள் நிறைந்திருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு சத்துகள் கிடையாது. ஆனால், அதிக அளவில் நார்ச்சத்து அடங்கி உள்ளது.
தோல் நோய்களுக்கு மருந்தாவதும், கண்களுக்கு நல்ல பார்வையை கொடுக்க கூடியதுமான மரவள்ளி கிழங்கு, உடலுக்கு பலம் தரக்கூடியதும், தொழுநோய் புண்களை ஆற்றக்கூடியது நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து மூச்சு விடுவதை சீராக்குகிறது.


இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் வயிற்றில் ஏற்படும் அலசரை சரி செய்கிறது. சர்க்கரை வள்ளி கிழங்கு.


சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.


இதில் உள்ள சர்க்கரை சத்து மிகவும் தரமானது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக நிதானமாகவே அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.


சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இதை சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

 இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள செல்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.

அதனால் இது இளமையை பாதுகாக்கும் உணவாக திகழ்கிறது. இதில் இருக்கும் மாக்னீசியம் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ரத்த குழாய்களில் நன்கு சுருங்கி விரிய உதவுகிறது.

இதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களும் இதனை சாப்பிடலாம். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் அந்தோசையனின் என்ற நிறமிகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து செல்களை பாதுகாப்பதால் புற்றுநோய் தாக்குதல் தடுக்கப்படுகிறது.
https://goo.gl/Ue2ZpS






01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

09 Jul 2018

வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses

05 Jul 2018

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

28 Jun 2018

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்