சிக்கன் சூப் | Chicken soup
தேவையான பொருட்கள்:


கோழிக்கறி - ஒரு மார்பு துண்டு
தக்காளி - 4
வெங்காயம் - அரை
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறுதுண்டு
கொத்தமல்லித்தழை - சிறிது
முட்டை - 2
சிக்கன் ஸ்டாக் - 4 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தக்காளி சாஸ் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
வினிகர் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

தக்காளி, பூண்டு, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கோழிக்கறியினை துண்டங்களாக்கி நான்கரை கப் தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். இந்த வேக வைத்த நீர்தான் சிக்கன் ஸ்டாக்.

முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலந்து கொள்ளவும். அரை கப் சிக்கன் ஸ்டாக் உடன் கார்ன்ஸ்டார்சினை கலந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டினை போட்டு லேசாக வதக்கவும். அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து மேலும் ஒரு நிமிடத்திற்கு வேகவிடவும்.

பிறகு தக்காளி சாஸ், நறுக்கின தக்காளி சேர்த்து, தீயை சற்று அதிகம் வைத்து மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும்.

இப்போது சிக்கன் ஸ்டாக், சிக்கன் துண்டுகள், தேவையான உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு கார்ன்ஸ்டார்ச்சினை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். சூப்பானது சற்று கெட்டியாகும் வரை கலக்கவும்.

அதன் பின் வினிகரை ஊற்றவும். அடித்து வைத்துள்ள முட்டையினை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலக்கவும்.

முட்டையானது நன்கு வெந்து மிதக்கத் தொடங்கும்போது நறுக்கின கொத்தமல்லித் தழையினைத் தூவி இறக்கவும்.






03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

18 Jun 2016

மணத்தக்காளி சூப்

08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

17 Aug 2015

வாழைத்தண்டு சூப்|Banana stem soup