சுகப்பிரசவமா கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



சுகப்பிரசவமா கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்
கருவில் குழந்தையை சுமக்கும் அனைத்து பெண்களும் விரும்பும் விஷயம் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பது தான். சிசேரியன் என்றால் வயிற்றை கிழிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவாரம் படுக்கையில் இருக்கவேண்டும். 6 மாதத்திற்கு எந்த ஒரு கடினமான வேலையும் பார்க்கக்கூடாது என்று பாடாய் படுத்திவிடும் சிசேரியன் முறை குழந்தை பிறப்பு. எனவேதான் பெரும்பாலான பெண்கள் சுகப்பிரசவம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கர்ப்பப்பை இறக்கம்

சுகப்பிரசவம் ரொம்பவே நல்லதுதான். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்கள்ல கவனமா இல்லாட்டி, கர்ப்பப்பை இறக்கத்தால பாதிக்கப்படற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சுகப்பிரசவத்தின் போது, ரொம்பவும் சிரமப்பட்டு, குழந்தையை வெளியேற்றுவது, கஷ்டமான பிரசவம், ஆயுதப் பிரசவம்... இதெல்லாம் இடுப்பெலும்பு தசைகளை தளர்த்திவிடும்.

பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலும், அதிக எடை தூக்குதல், ரொம்பவும் உடம்பை வருத்தற மாதிரியான வேலைகளைச் செய்வதன் மூலமாகவும் தசைகள் தளர்ந்து, கர்ப்பப்பை பொதுவாக இருக்க வேண்டிய இடத்துலேர்ந்து இறங்கிவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பக் கட்டத்துல இருந்தா சரி செய்யறது சுலபம். வலை மாதிரியான ஒன்றின் முனையை கர்ப்பப்பையோட பின் பக்கத்துலயும்,இன்னொரு முனையை இடுப்பெலும்புலயும் சேர்த்து தைத்துவிடலாம். இதனால் கர்ப்பப்பை தன்னோட இயல்பான இடத்துக்கே வந்துடும். இந்த சிகிச்சைக்குப் பிறகு எடை தூக்காம இருக்க வேண்டியது முக்கியம்.

கர்ப்பப்பை இறக்கத்தை ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டால் அது தனக்குப் பக்கத்துல உள்ள சிறுநீர்ப்பை, மலப் பைகளையும் சேர்த்து இழுக்க ஆரம்பிக்கும். சிறுநீர் பை இறங்கத் தொடங்கினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வும், முழுமையா சிறுநீரை வெளியேத்தாத உணர்வும் ஏற்படும். தவிர, அந்தப் பைக்குள் எப்போதும் சிறுநீர் தங்கி, நோய் தொற்றினை ஏற்படுத்தும். அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.

இதே மாதிரிதான் மலப்பை இறக்கத்துலயும் பிரச்னைகள் ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும்போது சிறுநீர் பை, மலப் பைகளையும் சேர்த்து தூக்கி வச்சுத் தைக்க வேண்டியிருக்கும் என்கின்றனர் அவர்கள்.


எதையுமே கவனிக்காமல் விட்டா, பிரச்னை தீவிரமாகி, கர்ப்பப் பையையே அகற்ற வேண்டி வரலாம். பிரசவமான பெண்களுக்கு மட்டுமில்லாம, கல்யாணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கலாம். அவங்களுக்கு கொலாஜன் திசுக்கள் பலவீனமாகி, அதன் விளைவா, கர்ப்பப்பை இறங்கலாம். சிலருக்கு பிறவியிலேயே தசைகள் பலவீனமா இருந்து, இப்படி நடக்கலாம். கர்ப்பப்பை இறக்கத்தை இப்ப லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமா ரொம்ப சுலபமா சரி செய்ய முடியும் என்றும் ஆறுதலாக தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.
https://goo.gl/V7bF2a






14 Nov 2017

குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments

29 Nov 2016

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்

18 Oct 2016

குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்

22 Aug 2016

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்

09 Mar 2014

குழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்

02 Feb 2014

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்

09 Jul 2013

டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்

26 Jun 2012

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

24 Jun 2012

குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?

24 Jun 2012

குழந்தையின் வயிற்றுப்போக்கு