samayalkurippu logo

சுசியம் | susiyam tamil ,susiyam tamil susiyam recipe in tamil

சுசியம்susiyam,tamil,,susiyam,recipe,in,tamil,tamil,samayal,sweet,deepavali,sweet,சுசியம்,|,susiyam,tamil,,susiyam,tamil,,susiyam,recipe,in,tamilVeg,non-veg,cookery




சுசியம் | susiyam tamil

Monday , 17th October 2011 05:18:46 AM

சுசியம் | susiyam tamil ,susiyam tamil  susiyam recipe in tamil தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
பெரிய தேங்காய் - 
வெல்லம் - கால் கிலோ.
ஏலக்காய் - 5 (பொடித்தது)
நெய் - 4  ஸ்பூன்.
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணை - பொறிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:

 தேங்காயை பூப் போல துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் வெல்லத்தைப் பொடித்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து, அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றவும். அதில் துருவிய தேங்காயைப் போட்டு, தண்ணீர் வற்றும்  வரை கிளறவும்.

அத்துடன், பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி, ஏலக்காய்த் தூளை சேர்த்து,திரண்டு  வரும் போது கிளறி இறக்கி ஆற வைக்கவும்.

மேல் மாவிற்கு - பச்சரிசியையும், உளுந்தையும் ஒன்றாகக் கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் அதை மிக்சியில் நைசாக அரைக்கவும். பின்னர் கரைத்த மாவில், துளி உப்புச் சேர்த்துக் கலக்கவும்.

சேர்த்த பூரணத்தை சிறு எலுமிச்சம் பழ அளவு உருட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி, எண்ணை காய்ந்ததும், உருட்டி வைத்ததை மாவில் தோய்த்து எடுத்து எண்ணையில் போட்டுப் பொரிக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து பொரித்தெடுக்கவும்.

சுவையான சுசியம் ரெடி .

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in