சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu

தேவையான பொருள்கள்
துவரம் பருப்பு / Thuvaram Paruppu / Toor Dal- 200 gram
சின்ன வெங்காயம் / Small onion / Chinna vengayam - 20
பச்சை மிளகாய் / Green chilli / pachai milagai - 3
மல்லி இலை / Malli ilai / coriander leaves - சிறிதளவு
கறிவேப்பிலை /Curry leaves / karuveppilai leaf - சிறிதளவு
பெருங்காயத்தூள் / asafoetida / perungayam powder - 1/2 spoon
உப்பு / salt - 1/2 spoon
பருப்பு உருண்டை செய்முறை:
பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்.
சின்னவெங்காயம், பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைத்த பருப்பு ,நறுக்கிய பொருள்கள், உப்பு ,பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
குழம்பு செய்முறை:
நல்லெண்ணெய் 50 கிராம் ஊற்றி பெருஞ்சீரகம் ,கரு வேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் 10 பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் 4 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் ( https://youtu.be/YiJE3rSFvds ) போட்டு பச்சை வாசனை போக வதக்கி அதனுடன் நறுக்கிய 2 தக்காளி பேட்டு வதக்கவும்.
நெல்லிக்காய் அளவு புளி ஊற வைத்து அதனை கரைத்து வதங்கிய மசாலாவுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் கால் மூடி தேங்காய் அரைத்த விழுது உப்பு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
இந்த குழம்பு கொஞ்சம் தண்ணியா தான் இருக்க வேண்டும். உருண்டை வெந்து வரும் போது சிறிது கரைந்து குழம்பு கெட்டியாகி விடும்.
குழம்பு கொதித்து பச்சை வாசனை போனவுடன் பருப்பு உருண்டையை சின்ன சின்னதாக உருட்டி குழம்பில் போட வேண்டும்.
பருப்பு உருண்டை வெந்தவுடன் மேல் எழும்பி வரும் கரண்டி விட்டு கிளர வேண்டாம். மிகவும் சுவைாயான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.
Related :
சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
பருப்பு உருண்டை செய்வதற்குதேவையான பொருள்கள் துவரம் பருப்பு / Thuvaram Paruppu / Toor Dal- 200 gramசின்ன வெங்காயம் / Small onion / Chinna ...
மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil
தாளித்த மோர் தேவையான பொருள்கள் தயிர் / curd - அரை லிட்டர்கடுகு / Musterd - அரை ஸ்பூன்பெருங்காயத்தூள் / asafoetida - 1/2 spoonமஞ்சள் ...
பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu
தேவையான பொருள்கள் துவரம் பருப்பு / Thuvaram Paruppu - 200 gram மஞ்சள் தூள் / Turmeric - 1/2 டீஸ்பூன்பெருங்காயத் தூள் / asafoetida - ...
சின்ன வெங்காய குழம்பு| Chinna Vengaya Puli Kuzhambu Recipe
தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.சின்ன வெங்காயத்தை தேனுடன் கலந்து ...
ஹோட்டல் டிபன் சாம்பார் | Hotel Sambar in Tamil |
தேவையான பொருட்கள்:பாசிப்பருப்பு - அரை கப்துவரம் பருப்பு - அரைகப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 2பச்சை மிளகாய் - 4மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்சாம்பார் ...
கொண்டைக்கடலை குழம்பு | kondakadalai kulambu
தேவையானவைகருப்பு கொண்டைக் கடலை / kondakadalai - 150 கிராம்.வெங்காயம் / venkayam - 1.தக்காளி / thakkali - 2.மிளகாய்த் தூள் / chilly powder ...
குளிர்காலத்திற்கான மிளகு குழம்பு / milagu kulambu recipe in tamil
தேவையானபொருள்கள்.மிளகு / pepper - 2 ஸ்பூன்சீரகம் / cuminseeds-2 ஸ்பூன்கடலைபருப்பு / chana dal - 2 ஸ்பூன்உளுந்து / urad dal - 2 ...
வாழைப்பூ குருமா / banana flower curry
தேவையான பொருள்கள்.சிறிய வாழைப்பூ / banana flower - 1வெங்காயம் / onion - 3தக்காளி / tomoto -3பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூ, இலை - ...
4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு
தேவையான பொருள்கள்:சின்ன வெங்காயம் - 20புளி - எலுமிச்சை பழம் அளவுபூண்டு - 20நல்லெண்ணெய் - 1 குழிகரண்டி அளவுதக்காளி - 1மல்லி தூள் - 3 ...
தீபாவளி லேகியம் செய்யும் முறை
லேகியம் செய்யத் தேவையான பொருட்கள் :இஞ்சி - 50 கிராம்வெல்லம் - 100 கிராம்சீரகம் - 25 கிராம்தனியா - 10 கிராம்நெய் - 25 கிராம்செய்யும் ...