செட்டிநாடு மட்டன் கிரேவி

தேவையான பொருள்கள்
மட்டன் -1/4 கிலோ
சின்ன வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 20
இஞ்சி – பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
மிளகு சீரகத் தூள் – 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
தேங்காய் – 1 ஸ்பூன்
சகசா - 1ஸ்பூன்
முந்திரி - 4
தாளிக்க:
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய் - 1
லவங்கம் – 1
சோம்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை – 1 கொத்து
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டனை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரை விட்டு, பின் சிம்மில் 5 நிமிடம் வேக விடவும். அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின், தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். பிறகு, மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின் வேக வைத்த மட்டனைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும்.
தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கி, பின் மிளகு சீரகத் தூள் சேர்த்து, மசாலா நன்றாகக் கெட்டியாகி வறுவல் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.
இந்த வறுவல் அனைத்து சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

Related :
சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu
தேவையானவை:மட்டன் - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - ...
ஆட்டுக்கால் பாயா | attukal paya
தேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் ...
மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani
தேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன் - அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் - 4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் ...
மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa
தேவையான பொருட்கள் : மட்டன் கொத்துகறி - 150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மஞ்சள் ...
மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval
தேவையான பொருட்கள்:மட்டன் – அரை கிலோ சின்ன வெங்காயம் – கால் கப்பூண்டு - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் தக்காளி – ...
மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
தேவையான பொருட்கள்: மட்டன் - அரை கிலோ துவரம் பருப்பு - 3 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...
ஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops
தேவையான பொருள்கள்மட்டன் - அரைக் கிலோபச்சைமிளகாய் விழுது - 1 ஸ்பூன்தனியா தூள் -2 ஸ்பூன்மிளகு தூள் - 1 ஸ்பூன்நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்இஞ்சி பூண்டு ...
மட்டன் கோலா
தேவையான பொருள்கள்மட்டன்கொத்து கறி - அரை கிலோபெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது), துருவிய தேங்காய் - 3/4 கப், முட்டை - 1, பச்சை மிளகாய் ...
மட்டன் சாப்ஸ்
தேவையான பொருள்கள்மட்டன் - அரை கிலோகலந்த மிளகாய்ப்தூள் - 2 ஸ்பூன்மஞ்சள்பொடி - ஒரு ஸ்பூன்மிளகுத்தூள் - 2 ஸ்பூன்சோம்புத்தூள் -1 ஸ்பூன்சீரகத்தூள் - 1 ஸ்பூன்இஞ்சி,பூண்டு ...
மட்டன் கடாய்
தேவையான பொருட்கள்: மட்டன்(எலும்பில்லாதது) - அரைக் கிலோவெங்காயம் - 3தக்காளி - 1பச்சைமிளகாய் - 2இஞ்சி, பூண்டு விழுது - 3 ஸ்பூன்பட்டை - ஒரு அங்குல ...