செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
தேவையான பொருட்கள்:

வஞ்சிரம்  மீன் –அரை கிலோ

நறுக்கிய  தக்காளி – 4

நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்

பூண்டு – 10 பல்

கறிவேப்பிலை – சிறிதளவு

மிளகாய் தூள் – 1   ஸ்பூன்

சாம்பார் தூள்  -  1   ஸ்பூன்

சீரக தூள்   –   1  ஸ்பூன்

மஞ்சள் தூள் –   1   ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

புளி – 1 எலுமிச்சை அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்  –  4   ஸ்பூன்

சோம்பு – சிறிதளவு

சீரகம் – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு


செய்முறை:


முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து  கொள்ள வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

புளியை  தண்ணீரில்  கரைத்து வைத்து கொள்ளவும்.


பின்னர்   கடாயை அடுப்பில் வைத்து, அதில்  பின் அதில் நல்லெண்ணெய்  ஊற்றி சோம்பு,சீரகம்,வெந்தயம்,கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில்  தக்காளியை சேர்த்து,  10  நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

அடுத்து, அதில் மிளகாய் தூள்,சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி,புளிதண்ணீர்  சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, அடுப்பை சிம்மில்  வைத்து   10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும்.

மீனானது நன்கு வெந்ததும்,  கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு  ரெடி.

https://goo.gl/Axchgx
adresponsive_1






செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
22 Dec 2018

நாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
30 Aug 2017

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
24 Aug 2017

மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
23 Feb 2017

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
17 Feb 2017

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
02 Feb 2017

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
30 Jan 2017

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
16 Jan 2017

கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
14 Jan 2017

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
09 Jan 2017

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu




adresponsive_4