திராட்சைப் பழச்சாறு


தேவையான பொருட்கள்


திராட்சைப்பழம்         -1கிலோ

சர்க்கரை            -1/2கிலோ

தண்ணீர்             - தேவையான அளவு

சோடியம்
பென்சோவேட்        -2 கிராம்

சிட்ரிக் அமிலம்        -6 கிராம்

செய்முறை


திராட்சைப்பழக் கொத்துக்களில் நல்ல தரமான பழங்களைத் எடுத்து கொள்ளவும். பழங்களைக் கழுவியபின் காம்புப் பகுதிகளை அகற்றி சிறிதளவு நீர் சோத்து சூடாக்கவும். இதனால் பழங்கள் மிருதுவாகும். அதன்பின் பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சாறு எடுக்கவும். மெல்லிய துணி மூலம் சாறை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

சாக்கரையில் பாகு தயாரித்து. அதில் திராட்சைப் பழச்சாறை கொட்டி கலக்கவும். குறைந்த அளவு நீரில் சிட்ரிக் அமிலத்தையும் கலக்கி சாற்றுடன் சோக்கவும். இந்தப் பழரசத்தை பாட்டில்களில் ஊற்றியபின் காற்றுப்புக வண்ணம் அடைத்து எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.


சத்தும் பயனும்

திராட்சைப் பழத்தில் வைட்டமின் A, B, Cஆகிய வைட்டமின்கள் உள்ளன. இது வறட்சியைப் போக்கி தாகத்தைத் தனிக்கவல்லது. மலச்சிக்கலைப் போக்கவல்லது.https://goo.gl/dGhBf7


05 May 2017

குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi

12 Oct 2016

பனானா சர்பத் | valaipalam sarbath

19 Nov 2013

பைனாப்பிள் ஜுஸ்

29 Aug 2013

யோகர்ட் சாலட்

24 Jul 2013

ஃப்ருட் மிக்சர் ஜீஸ்

24 Jul 2013

ஜிஞ்சர் ஜீஸ்

24 Jul 2013

தக்காளி ஜீஸ்

10 Apr 2013

லெமன் சர்பத்

10 Apr 2013

லஸ்ஸி

06 Apr 2013

பாஸந்தி