தூதுவளை இலையின் மருத்துவ குணங்கள் | Thoothuvalai Benefits and Medicinal Uses
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அற்புத மூலிகைகளில் இதுவும் ஒன்று

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.


அதனால் தூதுவளை  கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
தூதுவளைக் கீரை சமையல் 48  நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய் தீரும்.


தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து  வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.

காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.



தூதுவளை பூவை உலர வைத்து காயவைத்து அதை பொடி செய்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால்

கண் பார்வை பளிச்சென்று தெரியும்.

இந்தத் தூதுவளை பூவை எப்பேற் பட்ட கண்நோய்களுக்கும் உள்மருந்தாக கொடுக்கிற பொழுது நன்கு குணம் தெரிவ தற்குக் காரணம் நமது உடலிலே கண் சார்ந்த நரம்புகள் மிகவும் நுட்பமானது, உணர்ச்சி கரமானது, உணர்வுப் பூர்வமா னதும் கூட• இத்தகைய‌ கண் நரம்புகளை யே வலுப்படுத்தக்கூடிய வல்லமை இந்தத் தூதுவளை பூவிற்கு உண்டு

மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல்,போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.



தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்மார்புச்சளி, இருமல், சரியாகும்.


தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், ஆஸ்தூமா வராது.


கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.


தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.

தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது.


ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.


தூது  வளை  கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை கிடைக்கும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும்.

ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

தூதுவளைக் கீரையைப் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகும்.

தூதுவளைக் கீரையைக் காயவைத்துப் பொடியாக்கித் தினமும் சாப்பிட்டால் காது தொடர்பான நோய்கள் அனைத்தும் சரியாகும்.

தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

தூதுவளைக் கீரைச் சாறை 30 மி.லி. அளவில் தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது.

இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.


பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை  மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.


தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும்.


ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.











16 Apr 2018

உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்

14 Apr 2018

ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்

12 Apr 2018

குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்

09 Apr 2018

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol

01 Mar 2018

உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet

20 Feb 2018

மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்

08 Feb 2018

குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் | best foods to prevent stomach cancer

19 Dec 2017

தூதுவளை இலையின் மருத்துவ குணங்கள் | Thoothuvalai Benefits and Medicinal Uses

12 Dec 2017

பெண்கள் கட்டாயம் சாப்பிட கூடிய உணவு வகைகள் healthy foods every woman must eat

04 Dec 2017

அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் சீரக தண்ணீர் | Best Benefits and Uses Of Cumin Water