நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe
தேவையான பொருள்கள்

பனீர் - கால் கிலோ
சர்க்கரை - 150 கிராம்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
நெய் - 50 கிராம்
குங்குமப்பூ - 1  சிட்டிகை
நட்ஸ் கலவை  - ஒரு கப்
சர்க்கரை சேர்த்த கோவா - 100 கிராம்
பால் - கால் லிட்டர்
வெள்ளித்தாள் - அலங்கரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

நட்ஸில் இருந்து அலங்கரிக்க சிறிதளவு தனியாக எடுத்து வைக்கவும்.

மீதமுள்ள நட்ஸை  3  ஸ்பூன் நெய் ஊற்றி  வறுத்து  தனியே எடுத்து வைக்கவும்.

கோவா பனீரை  தனிதனயாக  துருவி வைத்து கொள்ளவும்.
ஒரு  கடாயை அடுப்பில்  வைத்து அதில் பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இதில் துருவிய பனீரை சேர்த்து, கைவிடாமல் கிளறி அதனுடன்  சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகும் வரை  கிளறவும்.

இதனுடன் துருவிய கோவா, பொடித்த நட்ஸ், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கையெடுக்காமல், அடுப்பை மிதமான தீயில் வைத்து, நன்கு கிளறவும்.

இப்போது மீதி உள்ள நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறி, ஒட்டாத பதம் வந்ததும் கலவையை நெய் தடவிய டிரேயில் ஊற்றிச் சமப்படுத்தவும். நட்ஸ், வெள்ளித்தாள் கொண்டு அலங்கரித்து துண்டுகள் போடவும்..சுவையான நட்ஸ் - பனீர் பர்ஃபி ரெடி.


https://goo.gl/fwc7uR






27 Jun 2018

நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe

29 May 2018

மாம்பழ அல்வா | mango halwa

21 May 2018

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam

03 Apr 2018

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun

13 Feb 2018

பாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam

17 Jan 2018

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew

07 Mar 2017

சிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam

20 Feb 2017

கேரளா பால் பாயசம் | kerala paal payasam

04 Jan 2017

இனிப்பு ராகி புட்டு பயறு| ragi sweet puttu

13 Oct 2016

தூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet