samayalkurippu logo

பச்சைப்பட்டாணி- பக்கோடாசப்ஜி,பச்சைப்பட்டாணி- பக்கோடாசப்ஜி

பச்சைப்பட்டாணி-,,,பக்கோடாசப்ஜி,பச்சைப்பட்டாணி-,பக்கோடாசப்ஜி,பச்சைப்பட்டாணி-,பக்கோடாசப்ஜிVeg,non-veg,cookery


பச்சைப்பட்டாணி- பக்கோடாசப்ஜி

Saturday , 29th September 2012 12:46:51 AM

பச்சைப்பட்டாணி- பக்கோடாசப்ஜி,பச்சைப்பட்டாணி- பக்கோடாசப்ஜி


பச்சைப்பட்டாணி- பக்கோடாசப்ஜி

பக்கோடா தயாரிக்க

உருளைக்கிழங்கு       -4

கடலை மாவு           -4 ஸ்பூன்
அரிசி மாவு              -2 ஸ்பூன்
மிளகாய்த்தூள்        -அரை ஸ்பூன்
எண்ணெய்             - தேவையான அளவு
தண்ணீர்                -1 கப்
உப்பு                      -தேவையான அளவு

தொக்கு தயாரிக்க-
பெரிய வெங்காயம்        -1
பெருங்காயம்                 -ஒரு சிட்டிகை
இஞ்சி                             -ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்            -2
பிரிஞ்சி இலை              -1
முந்திரிப் பருப்பு           -5

இவை அனைத்தையும்   விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

பச்சைப்பட்டாணி        -1கப்
தண்ணீர்                        -3 கப்
தக்காளி சாஸ்              -3  ஸ்பூன்
எண்ணெய்                   -5  ஸ்பூன்
மல்லி இலை               -சிறிதளவு
குடை மிளகாய்           -2
மஞசள்தூள்                -அரை ஸ்பூன்
கரம் மசாலாப் பவுடர்   -தேவையான அளவு
மிளகாய்தூள்                -தேவையான அளவு
உப்பு                              -தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கு வேக வைத்து தோலுரித்து கட்டியில்லமால் மசித்துக்கொள்ளவும் அதில் கடலை மாவு அரிசிமாவு மிளகாய்தூள் உப்பு தண்ணீர் ஆகியன சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும் .கரைசல் ஒரளவு கெட்டியாக இருக்க வேண்டும் கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் கலவையைப் பக்கோடாக்களாக உதிர்த்துப் பொன்னிறமாகப் பொரித்துக் எடுக்கவும்


தொக்கு -செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் அரைத்தக் விழுதைச் சேர்த்துச் அடுப்பை சிம்மில்  வைத்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின்பு அதில் உரித்த பச்சைப்பட்டாணி தக்காளி சாஸ் மஞசள் தூள் கரம் மசாலா மிளகாய்த்தூள் உப்பு தண்ணீர் ஆகியன சோ்த்துக் கலவையைக் கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில்   வைத்திருக்க வேண்டும். பச்சைப்பட்டாணி நன்கு வெந்தபிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்

குடைமிளகாயின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கி  தொக்கில் சோக்கவும். பக்கோடாக்களை அதில் சோ்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவிப் பரிமாறவும்

 

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in