புற்று நோய் செல்களை அழிக்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்
தினசரி உணவுகளில் எப்போதும் இடம்பெறும் பொருள் கறிவேப்பிலை. .


முடி கொட்டுவதைத் தவிர்க்க, செரியாமையைப் போக்க, அமீபியாசிஸ் (Amebiasis) எனப்படும் ஒரு வகை வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த, வயோதிகத்தில் வரும் 'அல்சைமர்’ (Alzheimer) எனும் ஞாபக மறதியைக் குறைக்க எனப் பல பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கிறதாம் கறிவேப்பிலை.

இந்திய சமையலில் வாசனைக்குச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை உடையது என என்பதை ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

கறிவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை 42 சதவிகிதமும், ரத்தக் கொழுப்பை 30 சதவிகிதமும் குறைக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.

சிறு வயதிலேயே இளநரை ஏற்பட்டால், கறிவேப்பிலையோடு சின்ன வெங்காயம் சேர்த்து   அரைத்து  சாப்பிட  வேண்டும் . பித்தம்  கூடினாலோ, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ, இளநரை உருவாகும். முடியின் கறுமை நிறத்துக்குத் தேவை இரும்புச் சத்து. கறிவேப்பிலையில் இரும்புச் சத்து அதிகம். சின்ன வெங்காயம் ரத்தத்தைச் சுத்திகரித்து, பித்தத்தைக் குறைக்கும். இதனால் இளநரை குறைந்து முடிகள் கறுப்பாகும்.

முடி வளர்ச்சிக்குப் புரதமும் இரும்புச் சத்தும் தேவை. 50 கிராம் உளுந்துடன், 25 கிராம் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர நல்ல முடி வளர்ச்சி கிடைக்கும்.

கறிவேப்பிலையில் உள்ள கார்பஸோல் ஆல்கலாய்டுகள் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகின்றன. 20 கிராம் கறிவேப்பிலையுடன் மூன்று கிராம் சீரகம், ஒரு கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் இந்தக் கலவையைக் கலந்து குடித்துவந்தால், பித்தச் சூடு மற்றும் கருப்பைச் சூடு நிவர்த்தி ஆகும்.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்.

இரும்புச் சத்தும் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ள கறிவேப்பிலை ரத்த   சோகையை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கும்.

வாரத்துக்கு ஒரு முறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது, கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்த இழப்பினால் இரும்புச் சத்து குறையும். இதைச் சரிக்கட்டக் கறிவேப்பிலையைவிடச் சிறந்த மருந்து கிடையாது.  

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


கறிவேப்பிலை புற்று நோய் செல்களை அழிக்கும் வல்லமை படைத்தது. ரத்த சோகையை குணப்படுத்தும் அதுமட்டுமல்ல. உங்க ஞாபக மறதியையும் குணப்படுத்தும். எப்படி தெரியுமா? இந்த மாதிரி கருவேப்பிலையை சாப்பிட்டுப் பாருங்க.


கறிவேப்பிலை டீ நம்முடைய வாடிக்கையை மாற்றுவதற்க்கென்றே வந்திருக்கிறது

‘கறிவேப்பிலை டீ' தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - ஒரு கப் தண்ணீர் - 2 கப் சீரகம் - சிறிதளவு வெல்லம் - சிறிதளவு கருப்பு உப்பு - சிறிதளவு செய்முறை : 1.சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். 3.நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்க்கவும். 4.ஐந்த நிமிடம் கழித்து அதனை இறக்கிவிடலாம். அதில் சிறிதளவு கறுப்பு உப்பு மற்றும் சீரகத் தூளை கலந்து குடிக்கலாம்.

கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கிறதென்று ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் . இதிலுள்ள நார்ச்சத்து,வைட்டமின்,மினரல் உள்ளிட்டவை செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றன. கண்பார்வை அதிகரிக்க, முடி கொட்டாமல் இருக்க, சளித்தொல்லைக்கு,மலச்சிக்கல் என நம் கெட்ட கொழுப்பை கரைக்க, உடல் உபாதைகள் பலவற்றிற்கும் அருமருந்தாய் இருக்கிறது.



https://goo.gl/nB9xiY






19 Dec 2017

தூதுவளை இலையின் மருத்துவ குணங்கள் | Thoothuvalai Benefits and Medicinal Uses

12 Dec 2017

பெண்கள் கட்டாயம் சாப்பிட கூடிய உணவு வகைகள் healthy foods every woman must eat

04 Dec 2017

அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் சீரக தண்ணீர் | Best Benefits and Uses Of Cumin Water

14 Nov 2017

மழைக்காலங்களில் ஜலதோ‌ஷத்தை குணமாக்கும் இயற்கை வழிகள்| cold treatment in tamil language

09 Nov 2017

தலைசுற்றலை நீக்கும் ஏலக்காயின் மருத்துவ குணங்கள்| Best Benefits and Uses Of Green Cardamom

08 Aug 2017

கறிவேப்பிலை டீ | curry leaves tea

04 Aug 2017

அல்சர் வயிற்றுபுண் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil

01 Aug 2017

பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்

25 Jul 2017

வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்தியம்| mouth smell treatment in tamil

25 Jul 2017

கணவன் மனைவி உறவில் விரிசல் வராமல் இருக்க மனைவியை ரசியுங்கள்