samayalkurippu logo

பூண்டு ரசம்,

,பூண்டு,ரசம்,Veg,non-veg,cookery




பூண்டு ரசம்

Friday , 17th June 2011 01:19:33 AM

தேவையான பொருள்கள்:

பூண்டு - 5 பல்
சீரகம் - 2 தேக்கரண்டி
* மிளகு – 2 தேக்கரண்டி
* வர கொத்தமல்லி - அரை தேக்கரண்டி
* வர மிளகாய் – 1
* மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
* தக்காளி –1
* உப்பு - தேவையான அளவு
* கொத்தமல்லி தழை – சிறிது
* கடுகு - 1 தேக்கரண்டி
* கருவேப்பிலை – சிறிது
* பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
* எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:

சீரகம், மிளகு, கொத்தமல்லி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.வரமிளகாயை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும்.
புளியுடன், தக்காளியும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும் அல்லது தக்காளியை பொடியாக நறுக்கி தாளிக்கும்போது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து, வரமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவு பூண்டு வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.


பின் ,பெருங்காயத்தூள், அரைத்த பொடியை சேர்த்து வதக்கவும். இப்பொழுது கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். ரசம் நுரைத்து பொங்கி வரும்போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in