பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின்  மருத்துவப் பயன்கள்
மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். அவற்றில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு புற்று நோயிலிருந்து நிவாரணம் அளிக்கவல்லது என்பதாகும்.


தமிழ்நாடு, கேரளா என எல்லா இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் பெரும்பாலும் சிப்ஸ், வேஃபர்ஸ் தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு வேறு பெயர்களும் உண்டு.

 உணவுப்பொருளான மரவள்ளிக் கிழங்கு, பல்வேறு தொழிற்சாலைகளில் - குறிப்பாக நொதித்தல் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ஃப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
 
88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான  மருத்துவப் பயன்கள் கொண்டது.ஆரோக்கியமான பருமனுக்கு  உதவுகிறது.
 
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும்... முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.
 
 ஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. உடலில் நீரில் சமநிலையை சரி செய்ய உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட ஜவ்வரிசி வயிற்றுப்புண் ஆற்றுவதற்கும், எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது.

அல்சர் நோய் இருப்பவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை நீர்க்க காய்ச்சி 1 மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக குடித்து வர வலி குறையும். நாள்பட்ட சீதபேதி இருப்பவர்களும் பாயசம் போல மோர், உப்பு சேர்த்து குடிக்க நல்ல சக்தி கிடைக்கும். வயிற்று வலி குறையும்.

 

https://goo.gl/P7unAx










09 Jun 2018

அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil

28 May 2018

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil

27 May 2018

பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்

21 May 2018

நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்

21 May 2018

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

16 Apr 2018

உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்

14 Apr 2018

ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்

12 Apr 2018

குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்

09 Apr 2018

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol

01 Mar 2018

உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet