பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள். , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.

சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை. 

 நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.

 பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.

ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.

முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.

 வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.

பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்.







28 Jul 2017

தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான காரணங்கள்| reason for husband wife fight

25 Jun 2013

மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்

24 Jun 2013

இல்லறம் இனிக்க சில வழிமுறைகள்

04 Jun 2013

குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்

28 Apr 2013

திருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்

17 Apr 2013

மகளிருக்கான சமையல் டிப்ஸ்

17 Apr 2013

பெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:

25 Mar 2013

பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.

17 Mar 2013

கணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள்

05 Mar 2013

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க