பொங்கலிட உகந்த நேரம் எது?
நாளை 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தை மாதம் பிறக்கிறது. நாளைய தினம் நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. வீடுகளில் பொங்கலிட உகந்த நேரம் எது என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்றும், அறுவடைத்திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை, நாளை 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

தமிழ் மாதங்களில், தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரையிலான 6 மாதம் உத்தராயண புண்ணிய காலம் என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரையில் 6 மாதம் தட்சிணாயண காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றில், உத்தராயண காலம் சூரிய பகவான் உதயமாகி, சுடர்விட்டு பிரகாசிக்கக்கூடிய பகல் பொழுது என்றும், தட்சிணாயண காலம் தேவர்களுக்கு இரவுப்பொழுது என்றும், சொல்லப்படுகிறது.

உத்தராயணம் மோட்சத்தைக்கொடுக்கும் என்றும், தட்சிணாயணம் மத்திமகாலம் என்றும் கூறப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டே, அம்பு படுக்கையில் உயிரைப் பிடித்துக்கொண்டிருந்த பீஷ்மர், தன் உயிர் உத்தராயண காலத்தில் பிரிய வேண்டும் என்று பகவான் கிருஷ்ணரிடம் வேண்டிக்கொண்டதாகவும், அதேபோல் உத்தராயண காலத்திலேயே, பீஷ்மர் முக்தி அடைந்தார் என்றும் சொல்கிறார்கள்.

இந்த ஆண்டு நாளை (15-ந் தேதி) தை மாதம் பிறக்கிறது. நாளைய தினம் அதிகாலை 3 மணி 51 நிமிடத்தில், கிருஷ்ணபக்ஷம், சஷ்டி திதி, அஸ்தம் நட்சத்திரத்தில், அமிர்தயோகத்தில் விருச்சிக லக்னம், சனி ஹோரையில் தை மாதம் பிறக்கிறது.

சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையிலும், உகந்த அஸ்தம் நட்சத்திரத்திலும், சூரியபகவானின் நட்பாக கருதப்படும் விருச்சிக லக்னத்திலும் தை மாதம் பிறக்கிறது. கர வருடத்தில், மகர சங்கராந்தி பலனும் அதிக நன்மை கிடைப்பதாகவே கணக்கிடப்பட்டுள்ளது.

வீடுகளில், புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பொங்கலிட உகந்த நேரம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.35 மணியில் இருந்து 9.35 மணி வரையிலும், அதன்பின் 10.35 மணியில் இருந்து பகல் 12 மணி வரையிலும் நல்ல நேரம் ஆகும். இந்த வேளைகளில், புத்தாடை அணிந்து, புத்தரிசி கொண்டு பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்து குடும்பத்துடன் உண்டு மகிழலாம்.

பொதுவாக பொங்கல் திருநாளில், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெரியவர்கள் பொருள் கொடுத்து ஆசி வழங்குவார்கள். இந்த ஆண்டு, பிள்ளைகள் பெற்றோருக்கு பொன், பொருள் கொடுத்து அவர்களிடம் ஆசிபெறுவது சிறந்தது ஆகும்.

இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகை, வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதாலும், சூரியனுக்கு உகந்த அஸ்தம் நட்சத்திரத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியிலும் வருவதால், மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

குரு கேந்திரத்தில் சனி, சூரியன், புதன் இருப்பதால், குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். அரசாள்பவர்கள் நல்லாட்சி நடத்துவார்கள். தன, தானிய விருத்தி பெருகும். கடின உழைப்பின் மூலம், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்வதற்கான வழிவகை பிறக்கும்.
https://goo.gl/aiJJTV


13 Feb 2012

பால் பணியாரம்

07 Feb 2012

ரிப்பன் பக்கோடா

07 Feb 2012

முந்திரி புதினா பக்கோடா

06 Feb 2012

பூசணி போண்டா

04 Feb 2012

வெங்காய பக்கோடா

02 Feb 2012

ஈசி முறுக்கு

02 Feb 2012

காலிஃப்ளவர் பக்கோடா

01 Feb 2012

கிராமத்து முறுக்கு

01 Feb 2012

காராப் பூந்தி

28 Jan 2012

வெங்காய பக்கோடா