மகளிருக்கான சமையல் டிப்ஸ்

மகளிருக்கான சமையல் டிப்ஸ்

* ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.

* சாம்பார் வைக்கும் போது துவரம் பருப்பு இல்லை என்றால் ஒரு கரண்டிக் கடலை மாவைக் கரைத்து விட்டு அரைத்தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.

* தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை தூள் செய்து போட்டு சுளுக்கு உள்ள இடத்தில் சூடு பறக்கத் தேய்தால் சுளுக்கு உடனே குணமாகும்.

* கொழுந்து வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி நன்றாக அரைத்து நகத்தில் வைத்துக் கட்டினால் நகச்சுற்று குணமாகிவிடும்.

* கர்ப்பிணிப் பெண்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொண்டைக் கடலையைச் சுண்டல் செய்து சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஏற்படும்.

* மோர்க் குழம்புக்கு அரைக்கும் கலவையுடன் ஒரு ஸ்பூன் கடுகையும் சேர்த்து அரைத்து மோர்க் குழம்பு வைத்தால் வாசனையாக இருக்கும்.

* பயத்தம் பருப்புப் பூரணம் வைத்துப் போளி செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.

* அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பரப்புகளுடன் சிறிது கொண்டைக் கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.

* காராமணியை ஊறவைத்து அத்துடன் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, அரைத்து வடை சுட்டு, சுடச்சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* முட்டை கோஸ் வேகவைத்து நீரைத் தினமும் ஒரு டம்ளர் சாப்பிட்டு வந்தால் குடல்புண் ஆறும்.

* முருங்கைப் பூவை துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் வலுவடையும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.

* கோழி முட்டையை தினசரி உணவில் வேக வைத்துச் சாப்பிட வேண்டும். இப்படிச் செய்தால் பருவடைந்த இளவயதுப் பெண்களின் இடுப்பு எலும்புகளும், சினைப்பைகளும் வலுவடையும்.

* தினமும் சிறிதளவு அரிசி திப்பிலியை சாப்பிடுவாதல் இரைப்பை வலுப்பெறுகிறது. கப சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகின்றன. தாது நஷ்டம் நீங்கும்.

https://goo.gl/SQe6mv
adresponsive_1


மகளிருக்கான சமையல் டிப்ஸ்
28 Jul 2017

தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான காரணங்கள்| reason for husband wife fight

மகளிருக்கான சமையல் டிப்ஸ்
25 Jun 2013

மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்

மகளிருக்கான சமையல் டிப்ஸ்
24 Jun 2013

இல்லறம் இனிக்க சில வழிமுறைகள்

மகளிருக்கான சமையல் டிப்ஸ்
04 Jun 2013

குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்

மகளிருக்கான சமையல் டிப்ஸ்
28 Apr 2013

திருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்

மகளிருக்கான சமையல் டிப்ஸ்
17 Apr 2013

மகளிருக்கான சமையல் டிப்ஸ்

மகளிருக்கான சமையல் டிப்ஸ்
17 Apr 2013

பெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:

மகளிருக்கான சமையல் டிப்ஸ்
25 Mar 2013

பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.

மகளிருக்கான சமையல் டிப்ஸ்
17 Mar 2013

கணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள்

மகளிருக்கான சமையல் டிப்ஸ்
05 Mar 2013

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
adresponsive_4