மட்டன் தம் பிரியாணி mutton dum biryani , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.comமட்டன் தம் பிரியாணி| mutton dum biryani
தேவையான பொருள்கள்

பாஸ்மதி அரிசி - 3 டம்ளர்
மட்டன்    -  அரை கிலோ
 தக்காளி - 5
வெங்காயம் -  4
பச்சை மிளகாய் - 5
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 00 கிராம்
கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி
புதினா இலை - சிறிதளவு
எண்ணெய் - 150 கிராம்
நெய் - 2 ஸ்பூன்
பட்டை -1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2
இஞ்சி பூண்டு விழுது - 4  ஸ்பூன

செய்முறை

அரிசியை   அரை  மணி  நேரம்   ஊற வைக்கவும். வெங்காயத்தை    நீளமாக  நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியை  நறுக்கிக் கொள்ளவும்.

 மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். புதினாவை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.


குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, கிராம்பு ஆகியவற்றை போட்டு  லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியதும்   இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


அதன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன்     1 ஸ்பூன்
 உப்பு   மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கி அதனுடன்    மிளகாய்  தூள்,   மஞ்சள்தூள் , தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து கிளறவும். 


பின்  1  டம்ளர்   தண்ணீர்      தயிர்  சேர்த்து     குக்கரை   மூடி     4  விசில் விட்டு இறக்கவும்

பின்னர்    3  கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் சேர்த்து, பின்னர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை   தண்ணீரை  நன்கு  வடித்து விட்டு சேர்க்கவும்.    அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும்   உப்பு  சரிபார்த்து  குக்கரை மூடி வெய்ட் போட்டு 10 நிமிடம்  அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும்.


பின் 10 நிமிடம் கழித்து நன்கு கிளரி சூடாக பரிமாறவும்.   சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
https://goo.gl/ZptYbN


06 Jun 2018

மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai

11 Apr 2018

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu

06 Aug 2017

ஆட்டுக்கால் பாயா | attukal paya

08 Jan 2017

மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani

29 Nov 2016

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa

25 Oct 2016

மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval

11 Aug 2016

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna

10 Jun 2016

ஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops

12 Jul 2015

மட்டன் கோலா

12 Feb 2015

மட்டன் சாப்ஸ்