மழைக்காலங்களில் ஜலதோ‌ஷத்தை குணமாக்கும்  இயற்கை வழிகள்| cold treatment in tamil language
தற்போது அதிகம் மழை பெய்துக் கொண்டிருப்பதால் நம்மில் பலர் இந்த சளி தொல்லையால் அவதியுற்றுக் கொண்டிருப்போம். அவர்களுக்கான வழிகள்.


1 .கொதிக்கும் நீரில் 2 மேசை கரண்டி சுக்கு தூளுடன் 1/4 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசை கரண்டி தேன் கலந்து  பருகவும்.

2 . தலையில் நீர்கோர்த்து இருந்தால் 1 கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூளைக் கலந்து ஒரு துளி மஞ்சள் தூளும் சேர்த்து தினமும் ஒருமுறையாக, குறைந்தது 3 நாட்களுக்கு குடிக்கலாம்.


3. தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சாப்பிட மார்புச் சளி நீங்கும். சீரகத்தை நன்கு பொடி செய்து  பனங்கற்கண்டுடன் தினமும் 2 வேளை சாப்பிட்ட வேண்டும். இது சளி இருமலை போக்கும்.


4.பூண்டு இயற்கையாகவே ஜலதோ‌ஷத்தை குணமாக்கும். பூண்டு பற்களை வதக்கி வாயிலிட்டுமென்று விழுங்கலாம். பூண்டில் உள்ள அலிசின் என்ற மூலக்கூறு ஜலதோ‌ஷம் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது.


5.சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு  தினங்களில் சளி நீங்கும். மிளகை தூளாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட சளி நீங்கும்.


6.தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சூடாக்கி நெஞ்சில் தட வேண்டும். இது நெஞ்சு சளியைப் போக்கும்.  கற்பூரவல்லி இலை சாற்றை வெறும் வயிற்றில் குடிக்க சளி நீங்கும்.


7.கொதிக்கும் நீரில் ஆவி பிடிப்பது நல்ல பலன் தரும். சில துளி யூகலிப்டஸ் தைலத்தை தண்ணீரில் சேர்ப்பது இன்னும் நல்லது. தலையில் நீர் கோர்த்திருந்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.


8. கண்டங்கத்திரி 5 கிராம், திப்பிலி 5 கிராம், சீந்தில் கொடி 5 கிராம், 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, 100 மில்லி ஆகக்குறைத்து தேன் கலந்து காலை, மாலை 3 மாதம் சாப்பிட்டால் மூக்கில் நீர் வடிதல், சளி கட்டியாக வருதல், ஆஸ்துமா, சைன்ஸ் சரியாகும்.
 

https://goo.gl/WDLvrb










09 Jun 2018

அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil

28 May 2018

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil

27 May 2018

பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்

21 May 2018

நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்

21 May 2018

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

16 Apr 2018

உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்

14 Apr 2018

ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்

12 Apr 2018

குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்

09 Apr 2018

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol

01 Mar 2018

உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet