samayalkurippu logo

முடி உதிர்வதை தடுக்கும் கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்,koiya ilai medicinal uses Medicinal uses of guav guava leaves for hair loss guava leaves for weight loss

முடி,,,உதிர்வதை,,,தடுக்கும்,,,,,,கொய்யா,,,இலையின்,,,,,,,,,,,,மருத்துவ,,,பயன்கள்koiya,,,ilai,,,medicinal,,,uses,,,Medicinal,,,uses,,,of,,,guav,,,,,,guava,,,leaves,,,for,,,hair,,,loss,,,,,,guava,,,leaves,,,for,,,weight,,,loss,,,tamil,,,maruthuvam,,,tamil,,,samayal,,,kurippu,,,,முடி,உதிர்வதை,தடுக்கும்,,கொய்யா,இலையின்,,,,மருத்துவ,பயன்கள்,koiya,ilai,medicinal,uses,Medicinal,uses,of,guav,guava,leaves,for,hair,loss,guava,leaves,for,weight,lossVeg,non-veg,cookery




முடி உதிர்வதை தடுக்கும் கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்

Friday , 8th July 2016 06:23:16 AM

முடி உதிர்வதை தடுக்கும்  கொய்யா இலையின்    மருத்துவ பயன்கள்,koiya ilai medicinal uses Medicinal uses of guav guava leaves for hair loss guava leaves for weight loss
கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-பாக்டீரியல் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவைகள் நிறைந்துள்ளது.


மேலும் இதில் பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் டானின்கள் இருப்பதால், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.


100 கிராம் கொய்யா இலையில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு:

புரதம் – 2.55 கிராம்

வைட்டமின் B6 – 0.11 மி.கி (8%)

கோலைன் – 7.6 மி.கி (2%)

வைட்டமின் சி – 228.3 மி.கி (275%)

கால்சியம் – 18 மி.கி (2%)

இரும்பு – 0.26 மி.கி (2%)

மெக்னீசியம் – 22 மி.கி (6%)

மாங்கனீசு – 0.15 மி.கி (7%)

பாஸ்பரஸ் – 40 மி.கி (6%)

பொட்டாசியம் – 417 மி.கி (9%)

சோடியம் – 2 மி.கி (0%)
துத்தநாகம் – 0.23 மி.கி (2%)


கொய்யா இலையின்    மருத்துவ பயன்கள்


வயிற்றுப்போக்கு நிவாரணம் :

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 1-2 டம்ளர் நீரில் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வர வயிற்றுப்போக்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.


முடி உதிர்வதை தடுக்க


கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.

பல்வலி

வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால் பற்களின் ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் வீக்கம் ஆகியவற்றின் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும்.


 கொய்யா இலையை நன்கு கழுவி அதில் உள்ள பெரிய நரம்பை எடுத்து விட்டு வாயில் போட்டு மென்று அதை வைத்து பல் துலக்கினால்  பல்கூச்சம், ஈறுகளில் இரத்தப்போக்கு,   வீக்கம் அனைத்தும் சரியாகி விடும்.


செரிமானம்

கொய்யா இலை தேனீர் அல்லது கொய்யா சாற்றை அருந்தினால் செரிமான நொதி உற்பத்தியை அதிகரித்து உணவு நச்சை குறைக்கிறது.

 

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in