samayalkurippu logo

முட்டை கிரேவி ,

,முட்டை,கிரேவி ,Veg,non-veg,cookery




முட்டை கிரேவி

Friday , 3rd June 2011 06:52:57 AM

முட்டை கிரேவி
, தேவையான பொருள்கள்:


முட்டை - 3
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
கல் உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மிளகு, சீரக விழுது - அரை மேசைக்கரண்டி
தேங்காய் விழுது - கால் கப்


செய்முறை:



பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.


ஒரு பாத்திரத்தில் முட்டையை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து முட்டையின் மேல் ஓடை நீக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, அதில் நறுக்கின வெங்காயம், மற்றும் தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்.


அதன் பிறகு அதனுடன் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விட்டு அதனுடன் அரைத்து எடுத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விடவும்.


பின்னர் தேங்காய் விழுது போட்டு திக்காக ஆனதும் அரைத்த மிளகு, சீரக விழுதை போட்டு கிளறி மூடி வைக்கவும்.


5 நிமிடம் கழித்து திறந்து மசாலா நன்கு வதங்கி கிரேவி பதம் வந்ததும் வேக வைத்த முட்டையை போடவும்.


மசாலா சுவையுடன் கூடிய முட்டை கிரேவி தயார்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in