முட்டை மசால் | Egg Masala
தேவையான பொருட்கள் :

முட்டை - 3
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டு
தக்காளி - 2
மல்லி தூள் 2 ஸ்பூன்
மிளகாய் தூள்  - அரை ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
 நல்லண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு

செய்முறை :

முட்டையை வேகவைத்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
தக்காளியை அரைத்து வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் , நறுக்கிய  பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த  தக்காளி  சேர்க்கவும்.

பின்பு அதனுடன்  மசலா  தூள்கள் அனைத்தயும்  சேர்த்து   பச்சை வாசனை  போகும் வரை வதக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு  சேர்த்து  அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

அதில்  வேக வைத்த   முட்டையை சேர்த்து  மூடிபோட்டு  அடுப்பை   10 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேக விடவும்.


தண்ணீர் வற்றி திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

சுவையான  முட்டை மசால் ரெடி.
https://goo.gl/evdNpA






05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry

01 Mar 2018

முட்டை மசால் | Egg Masala

28 Aug 2017

முட்டை கட்லெட்| muttai cutlet

05 Jul 2017

செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma

05 Mar 2017

உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu

09 Jan 2017

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala

21 Sep 2016

முட்டை குருமா / muttai kurma