samayalkurippu logo

முருங்கைக்காய் தக்காளி தொக்கு ,Drumstick Thokku / Murungakkai Thokku

முருங்கைக்காய்,,,தக்காளி,,,தொக்கு,,,Drumstick,,,Thokku,,,/,,,Murungakkai,,,Thokku,முருங்கைக்காய்,தக்காளி,தொக்கு,,Drumstick,Thokku,/,Murungakkai,ThokkuVeg,non-veg,cookery


முருங்கைக்காய் தக்காளி தொக்கு

Tuesday , 15th July 2014 12:22:11 AM

முருங்கைக்காய் தக்காளி தொக்கு ,Drumstick Thokku / Murungakkai Thokku தேவையான பொருட்கள்

முருங்கைக்காய்  - 5

வெங்காயம் - 2

தக்காளி - 3

கறிவேப்பிலை -சிறிதளவு

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

எண்ணெய்  - 2 ஸ்பூன்

கடுகு உளுத்தம் பருப்பு -தாளிக்க

செய்முறை:

முருங்கைக்காயினை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காயை வேக விடவும்.

காய் நன்றாக வெந்தவுடன் ஆறவைத்து சதை பகுதியினை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும்.அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

இத்துடன் முருங்கைக்காய் வேகவைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்தவுடன் எடுத்து வைத்துள்ள முருங்கைக்காய் சதை பகுதியினை சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.



 

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in