samayalkurippu logo

முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள்: ஆய்வில் தகவல் ,

,முறையாகத்,தூங்கினால்,குழந்தைகள்,படுசுட்டிகளாக,இருப்பார்கள்:,ஆய்வில்,தகவல் ,Veg,non-veg,cookery




முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள்: ஆய்வில் தகவல்

Monday , 7th June 2010 08:48:51 PM

முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள்: ஆய்வில் தகவல்
, தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது:​ ​

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள்,​​ சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல்,​​ மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ளுதல்,​​ கணிதத்தில் புலியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன.

குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன்,​​ 11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே,​​ தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது,​​ கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார்.

குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in