மூலநோயை குணப்படுத்தும் மாசிக்காயின் மருத்துவ குணங்கள்

மேல் மருந்தாக பயன்படுத்தும்போது புண்களை ஆற்றுகிறது. வாய் கொப்பளிக்கும் நிலையில் பற்களுக்கு பலம் கொடுக்கிறது. அதிக மாதவிலக்கை நிறுத்த கூடிய தன்மை மாசிக்காய்க்கு உண்டு.
மாசிக்காயை பயன்படுத்தி பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கம், வாய் புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். மாசிக்காய் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
இதில் மாசிக்காய் பொடி சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்த பின் வாய்கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்துவர ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு, பல்வலி, வாய் புண்கள் குணமாகும்.
மாசிக்காயை பயன்படுத்தி கழிச்சல், வெள்ளைபோக்கு, அதிகப்படியான ரத்தபோக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாசிக்காய், மோர். செய்முறை: ஒரு டம்ளர் அளவுக்கு மோர் எடுத்துக்கொள்ளவும்.
இதனுடன் அரை ஸ்பூன் மாசிக்காய் சேர்த்து குடித்துவர வெள்ளைபோக்கு, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, கழிச்சல், சீதக்கழிச்சல் சரியாகும்.
மாசிக்காயை தூளாக்கி பாலில் இட்டு பருகிவர அதிக மாதவிலக்கு கட்டுப்படும். வலியுடனான மாத விலக்கு சரியாகும். வெள்ளைபோக்கு அதிகமாகும்போது இடுப்பு வலி, வயிற்று வலி, சோர்வு ஏற்படும். இப்பிரச்னைகளை மாசிக்காய் சரிசெய்கிறது.
மாசிக்காயை பயன்படுத்தி மூலநோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெண்ணெய், மாசிக்காய் பொடி. செய்முறை: பசு வெண்ணெய்யுடன் மாசிக்காய் பொடி சேர்த்து கலந்து இரவு நேரங்களில் பூசிவர மூலநோய், ஆசனவாய் கடுப்பு, வாய்ப்புண் குணமாகும்.
இதை தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு மேல்பூச்காக பயன்படுத்தலாம். மாசிக்காய் தோல் சுருக்கத்தை போக்கும் மருந்தாகி பயன்தருகிறது. மாசிக்காய் மிகுந்த துவர்ப்பு உடையது என்பதால் புண்களை ஆற்றும். ரத்தத்தை கட்டுப்படுத்தும். ஆசனவாய் வெடிப்பை குணப்படுத்தும். மாசிக்காயை பயன்படுத்தி முகப்பருக்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மாசிக்காய், ஜாதிக்காய், எலுமிச்சை. செய்முறை: மாசிக்காய் பொடியுடன் சிறிது ஜாதிக்காய் பொடி சேர்க்கவும். இதனுடன், எலுமிச்சை சாறு கலந்து பருக்களுக்கு மேல் பூசிவர பருக்கள் மறையும்.
தலைசுற்றலை போக்கும் மருத்துவம் -தேவையான பொருட்கள்: நெல்லி வற்றல், சுக்கு, கொத்துமல்லி. செய்முறை:
சிறிது நெல்லி வற்றல் எடுக்கவும். இதனுடன் கொத்துமல்லி, சுக்குப்பொடி சேர்த்து தேனீராக்கி குடித்துவர தலைசுற்றல் சரியாகும்.
Related :
மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்
உங்கள் மாதவிலக்கிற்கும் எடைக்கும் சம்பந்தம் உள்ளது. அதிக எடை முறையான மாதவிலக்கினை பாதிக்கும். ஆரோக்கியமான நார்சத்து மிகுந்த உணவினை உட்கொள்ளுங்கள். இது எடையை சீராய் வைக்கும். மலச்சிக்கலை ...
கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் |carrot juice benefits in tamil
கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடீன், பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுத்து, நல்ல பாதுகாப்பு வழங்கும். கேரட் ஜூஸ் சாறு எடுத்து தேனுடன் ...
நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக்கீரை | vendhaya keerai benefits in tamil
வெந்தயத்தை சமையலுக்கு தினமும் பயன்படுத்துகிறோம். இட்லி தோசைக்கு மாவாட்டுகையில் சிறிதளவு வெந்தயத்தை போடுவது வழக்கம். ஆனால் வெந்தயக்கீரையை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. சாதராண மண் தரையில் வெந்தயத்தை ...
கோடை கால வெப்பத்திலிருந்து தப்பிக்க கிர்ணி பழம் சாப்பிடுங்க
கடுமையாக வாட்டி வதைக்கும் கோடை காலங்களில் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். அப்படியான பழ வகைகளில் ஒன்றுதான் முலாம்பழம். இந்த முலாம் பழம் சாப்பிடுவதால் நமக்கு ...
குறைவான விலையில் நிறைவான பலன் தரும் தர்பூசணி பழத்தின் பயன்கள்
மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். ...
தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம்.வயிற்று ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும்.துரித உணவுகளால் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வராமலும் ...
வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் / venthayam benefits in tamil
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், ...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது அவை ஒத்து கொ ள்ளாமல் சிலர் ஜலதோசம்,மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்புதன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். ...
சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
சுளுக்கு குணமாக வெள்ளைப் பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவிவர சுளுக்கு குணமாகும்.சுளுக்கு குணமாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் வெந்நீர்விட்டு அரைத்து ...
உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
இளநீர் உடலைக் குளிர்ச்சியாக்குகிறது. வேர்குரு, சின்னம்மை, பெரியம்மை வியாதியைக் கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை மாற்றுகிறது. வயிற்றுப் போக்கு, காலராவைக் கட்டுப்படுத்துவதுடன் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட வைக்கிறது. ...