ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha
தேவையான பொருள்கள்.

கோதுமை மாவு - அரை கப்
ராகி மாவு -  அரை கப்
உப்பு - தேவையான அளவு
 
ஸ்டஃப்பிங்க்கு...

உருளைக்கிழங்கு - 1
கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2  ஸ்பூன்
ஒமம் - கால் ஸ்பூன்

செய்முறை

கோதுமை மாவு ராகி மாவு இரண்டையும் உப்பு  சேர்த்து  சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து கிளறவும்.


மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டவும்.


சூடான தோசைக் கல்லில்  பரோட்டாவை  சிறிதளவு  எண்ணெய்  விட்டு  2  பக்கமும் திருப்பி போட்டு  வேக வைத்து எடுக்கவும்.

சுவையான ராகி ஆலு பரோட்டா ரெடி.

https://goo.gl/4F7voj










03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati

30 Jun 2017

சில்லி ப்ரெட் | chilli bread recipe

22 May 2017

ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa

04 Jan 2017

கேரட் ரவா இட்லி|carrot rava idli

30 Oct 2016

கோபி மசால் தோசை | gobi masala dosa

17 Oct 2016

மசாலா சப்பாத்தி | masala chapathi