samayalkurippu logo

வஞ்சரம் மீன் குழம்பு/vanchiram fish kulambu ,vanchiram fish kulambu Chettinad seer fish curry vanchiram vanchiram anjaram Meen Kuzhambu .

வஞ்சரம்,,,மீன்,,,குழம்பு,,,,,,vanchiram,,,fish,,,kulambu,,,,,,Chettinad,,,seer,,,fish,,,curry,,,tamil,,,samayal,,,kurippu,,,vanchiram,,,meen,,,kulambuanjaram,,,Meen,,,Kuzhambu,,,.,,,tamil,வஞ்சரம்,மீன்,குழம்பு/vanchiram,fish,kulambu,,,vanchiram,fish,kulambu,,Chettinad,seer,fish,curry,vanchiram,vanchiram,,anjaram,Meen,Kuzhambu,.Veg,non-veg,cookery




வஞ்சரம் மீன் குழம்பு/vanchiram fish kulambu

Friday , 13th November 2015 05:10:37 PM

வஞ்சரம் மீன் குழம்பு/vanchiram fish kulambu  ,vanchiram fish kulambu  Chettinad seer fish curry vanchiram vanchiram  anjaram Meen Kuzhambu . தேவையான பொருள்கள்

வஞ்சரம் மீன் - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது),
தக்காளி 2  (நறுக்கியது),
பூண்டு   -  10 பல்
புளி - 1 நெல்லிக்காய் அளவு,
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி - சிறிது.

அரைக்க

தேங்காய்    - 1 கப்
சீரகம்        - 1 ஸ்பூன்
மிளகு       - 1 ஸ்பூன்

செய்முறை

அரைக்க  கொடுத்தவற்றை  சிறிது  தண்ணீர்   சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

முதலில் மீனை சுத்தம் செய்து, நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை 2 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பின் புளிச்சாறு சேர்த்து  அதனுடன் அரைத்த    தேங்காய்  விழுது  சேர்த்து  கொதிக்க விட வேண்டும். குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மீன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் தீயை குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். மீன் நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி  பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in