வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் . seetha palam medicinal uses , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



வயிற்று புண்களை குணமாக்கும்   சீத்தாபழத்தின் மருத்துவ  பயன்கள் .| seetha  palam medicinal uses
சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி,  வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக இருப்பதால் சுவையும்  இனிப்பாக இருக்கும்.  

மருத்துவ பயன்கள்:

சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.


இதில் உள்ள தாமிரச் சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு பழம் சாப்பிட்டுவர, அமிலத்தன்மையைச் சரிசெய்யும்.  வயிற்றில் புண்கள் வராமலும் தடுக்கும்.
 
மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை வெளியேற்றுவதால், வாதநோய், மூட்டுவலி, கீல்வாதநோய்களைப் போக்கும். சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். 

சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும்  பளபளப்பைக் கொடுக்கும்.


  சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்துவந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல்  மிருதுவாகும்.

https://goo.gl/N9Na2X






31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

09 Jul 2018

வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses

05 Jul 2018

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

28 Jun 2018

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்

28 Jun 2018

சர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies

09 Jun 2018

அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil

28 May 2018

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil

27 May 2018

பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்