samayalkurippu logo

வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை,வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை gastric problem

வாயு,,,தொல்லையை,,,தடுக்கும்,,,உணவு,,,முறை,,,gastric,,,problem,,,patti,,,vaithyam,,,tamil,,,samayal,,,kurippu,,,/patti,,,vaithyam,,,,வாயு,தொல்லையை,தடுக்கும்,உணவு,முறை,வாயு,தொல்லையை,தடுக்கும்,உணவு,முறை,gastric,problemVeg,non-veg,cookery


வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை

Thursday , 28th April 2016 11:47:51 PM

வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை,வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை gastric problem * அதிக கொழுப்பு சத்து உணவு தவிர்க்கப்படவேண்டும்.

* அதிக நார்சத்தினை சிறிது காலம் தவிர்த்திட வேண்டும்.

* பொறுமையாக சாப்பிட வேண்டும். அவசரம் என்ற பெயரில் அள்ளி விழுங்குவது தவறு.

* உணவு உண்ட பின் சிறிது நேரம் நடக்க வேண்டும்.

* பழச்சாறுகள் கூட சிலருக்கு இப்பாதிப்பினை ஏற்படுத்தலாம். எனவே அதனை உணர்ந்து தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கலுக்கு எளிதான சில தீர்வு முறைகள்:

* முழு தானிய உணவு மிக அவசியம். காலை உணவாக இதனை உட்கொள்வது மிகவும் நல்லது. இதோடு தினமும் சிறிதளவு பார்லியினை எந்த விதத்திலாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* நாள் ஒன்றுக்கு 5 முறை பழம், காய்கறிகள் எடுத்துக் கொள்ளுங்கள். ஆப்பிள் எப்பொழுதும் உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்துக் கொண்டால் நல்லது. இரண்டு வேளை உணவுக்கு நடுவே வாழைப்பழம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் பச்சை வாழைப்பழத்தை தவிர்த்திருங்கள்.

* ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த திராட்சையை சாப்பாட்டிற்கு பிறகு எடுத்துக் கொள்ளுங்கள்.


* காலையில் ஒரு கப் காபி குடலை இயக்கி கழிவுப் பொருட்களை வெளியேற்றும்.

* எள் மூலம் செய்த சிற்றுண்டிகளை உண்பது நல்லது.


* அதிக உணவை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

உணவை எப்படி மெல்ல வேண்டும் :

நீங்கள் சற்று முன்பு உணவு உண்ட பொழுது எத்தனை முறை அதனை மென்று விழுங்கினீர்கள் என்று உங்களால் உறுதியாய் சொல்ல முடியுமா? மென்று தின்பதால் ஏற்படும் நன்மைகளை அறிந்தால் ஓடிக் கொண்டும், பரபரத்துக் கொண்டும் உணவை அப்படியே விழுங்குவதை விட்டு விடுவோம்.

* மென்று விழுங்கும் போது உங்கள் உணவு மிகமெல்லியதாக உடைவதால் ஜீரணம் நடைபெறுவது எளிதாகிறது. இதனால் குடலுக்கு சத்துக்களை உறிஞ்சுவது எளிதாகின்றது. செரிமானமாகாதவை ரத்தத்தில் கலப்பது தவிர்க்கப்படுகின்றது.

* அதிக நேரம் மென்று விழுங்கும் போது குறைவான அளவே உட்கொள்ள முடியும் என்பதால் எடை நன்கு குறையும்.

* உணவு வாயில் நன்கு மெல்லப்படும் போது வாயில் உமிழ் நீரில் நன்கு கலக்கின்றது. இதனால் வயிற்றின் வேலை சுமை குறைகின்றது. உமிழ் நீரில் உள்ள என்சைம்கள் கொழுப்பினை நன்கு உடைத்து விடும். உணவு விழுங்குவதும் எளிதாகின்றது.

* உணவை மெல்லுவதால் பற்கள் பலம் பெறுகின்றன.

* மெல்லப்படாத உணவு வயிற்றில் அதிக பாக்டீரியாக்களால் தாக்கப்படுகின்றன. இதுவே குடல் வீக்கம், வலி, காற்று இவற்றிற்கு காரணமாகின்றது.

* மென்று தின்னும் பொழுதே உணவை சுவைக்க முடிகின்றது.

* எனவே சிறிய அளவில் உணவினை வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.

* நிதானமாய் நன்கு மெல்லுங்கள்.

* வாயில் உணவு மிக மென்மையாய் இருக்க வேண்டும்.

* நன்கு விழுங்கிய பிறகே நீர் குடிக்க வேண்டும். இதுவே முறையாக உணவு உண்ணும் வகை ஆகும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in