வெண் பொங்கல்

வெண் பொங்கல்
தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 3/4 உழக்கு
பாசிப்பருப்பு – 1/4 உழக்கு
நெய் -75 மிலி
வறுத்த முந்திரி-15
மிளகு-20
இஞ்சி-சிறிதளவு
கறிவேப்பிலை-சிறிது
பெருங்காயத்தூள்-சிறிதளவு
தண்ணீர்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பையும்,அரிசியையும் தண்ணீர் ஊற்றி நன்குகலையவும். குக்கரில் கொஞ்சம் நெய் ஊற்றி,சிறிதளவு சீரகம்,ஐந்தாறு மிளகுடன் ,அரிசி பருப்பு கலவையை வாசம் வரும் வரை வறுக்கவும்.

1 பங்கு அரிசி பருப்பு கலவைக்கு 4 பங்கு தண்ணீர் வைக்கவும்.ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை குறைக்கவும்.[இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும்]10 நிமிடத்தில் இறக்கி விடலாம்.

அடுத்து இருப்புச்சட்டியை அடுப்பில் வைத்து,நெய் ஊற்றி,சிறிது கடுகு போட்டு பொறிந்ததும்,தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி,சிறிதளவு பெருங்காயம்,கறிவேப்பிலை,வறுத்த முந்திரி,பொடித்த மிளகு போட்டு தாளித்து கொட்டினால் சுவையான வெண் பொங்கல் தயார்.
https://goo.gl/wHxpze


02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam

08 Aug 2016

ஈஸி எக் ரைஸ் / easy egg rice