பீட்ரூட் கட்லெட்/beetroot cutlet
தேவையான பொருள்கள்

உருளை கிழங்கு  - கால் கிலோ
துருவிய பீட்ரூட் - 1 கப்,
கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,

சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்,

கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்,

 ரஸ்க் தூள்  -  தேவையான அளவு,

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


செய்முறை

உருளை கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு மசித்து கொள்ளவும்

ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், கடலை மாவு,   உருளை கிழங்கு , உப்பு, கொத்தமல்லி, கரம் மசாலா சேர்த்து  நன்றாகப் பிசையவும்.

 இந்தக் கலவை கெட்டியாக இருக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் மைதா மாவைப் போட்டு, 1/4 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

பிசைந்து வைத்திருக்கும் பீட்ரூட்  கலவையை சிறு சிறு வட்டமாகத் தட்டி மைதா மாவுக் கரைசலில் ஒரு முறை முக்கி எடுத்து, ரஸ்க் தூளில் நன்கு இரண்டு புறமும் புரட்டி ஒரு தட்டில்  வைத்துக் கொள்ளவும்.

 இதை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கவும். எண்ணெயைக் காய வைத்து, தட்டி வைத்த பீட்ரூட் கட்லெட்களை  பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
https://goo.gl/gVg34c






28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi

12 Jul 2017

கேரளா கடலை கறி|kerala kadala curry

25 Feb 2017

பன்னீர் பச்சை பட்டாணி மசாலா|paneer pattani masala in tamil

03 Feb 2017

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal

28 Dec 2016

காராபூந்தி ரைத்தா| kara boondi raita

17 Dec 2016

வெள்ளரிக்காய் தக்காளி சாலட் | vellarikka salad

09 Dec 2016

ஆலு மட்டர் மசாலா | Aloo Matar masala

16 Nov 2016

வெஜிடபிள் கோலா உருண்டை \ vegetable kola urundai

01 Nov 2016

கொள்ளு துவையல் | Kollu Thuvaiyal