பேபி கார்ன் மசாலா/baby corn masala
தேவையான பொருள்கள்

பேபி கார்ன் - 1 பாக்கெட்
வெண்ணெய்  - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்
மிளகாய் தூள் - 2   ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2  ஸ்பூன்
கரம் மசாலா - 1  ஸ்பூன்
மல்லி இலை  - சிறிதளவு
எண்ணெய் - 2  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைக்க
 நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
 நறுக்கிய  தக்காளி - 2
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பேபி கார்னை  சின்ன துண்டுகளாக  நறுக்கி கொள்ளவும்.  கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி  வதக்கி இறக்கி ஆற வைத்து, பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கடாயை  அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.

அதில் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2  நிமிடம் கிளறி,  அதனுடன்  நறுக்கி  வைத்துள்ள  .பேபி கார்னை   சேர்த்து  நன்கு  கிளரவும் 


மசாலா வாசனை போனவுடன்  2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கிவத்து  கிரேவி பதம் வந்தவுடன் மல்லி இலை போட்டு இறக்கவும். இந்த கிரேவி  சப்பாத்திக்கு  சூப்பர்  காம்பினேசன்.
https://goo.gl/tMVNQN


28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi

12 Jul 2017

கேரளா கடலை கறி|kerala kadala curry

25 Feb 2017

பன்னீர் பச்சை பட்டாணி மசாலா|paneer pattani masala in tamil

03 Feb 2017

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal

28 Dec 2016

காராபூந்தி ரைத்தா| kara boondi raita

17 Dec 2016

வெள்ளரிக்காய் தக்காளி சாலட் | vellarikka salad

09 Dec 2016

ஆலு மட்டர் மசாலா | Aloo Matar masala

16 Nov 2016

வெஜிடபிள் கோலா உருண்டை \ vegetable kola urundai

01 Nov 2016

கொள்ளு துவையல் | Kollu Thuvaiyal