ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  

10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்குள் நுழையும். இதுவரை மும்பை அணி மட்டும் பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டன.

இந்த நிலையில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 49–வது லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமை யிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்–கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. தோல்வி கண்டால் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும் என்ற     நெருக்கடியுடன்     பஞ்சாப் அணி களம் கண்டது.

பஞ்சாப் அணியில் குர்கீரத்சிங், வருண் ஆரோன், டி.நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டு ராகுல் திவேதியா, மேட் ஹென்றி, ஸ்வப்னில் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் பியுஷ் சாவ்லா, ஷெல்சன் ஜாக்சன் ஆகியோருக்கு பதிலாக ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ் இடம் பெற்றனர்.

‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், மனன்வோரா ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரில் மார்ட்டின் கப்தில் ஒரு பவுண்டரி விளாசியதுடன் 8 ரன்கள் சேர்த்தார். முதலில் சற்று திணறிய மனன்வோரா சுனில் நரின் வீசிய ஒரு ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் 2 பவுண்டரி விளாசிய மனன்வோரா அதே ஓவரில் (5–வது ஓவர்) 5–வது பந்தை அடித்து ஆட முயன்றார். ஆனால் பந்து கையுறையில் (குளோவ்ஸ்) பட்டு விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா கையில் தஞ்சம் அடைந்தது. மனன்வோரா 16 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து ஷான் மார்ஷ் களம் இறங்கினார். அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்தில் (12 ரன்கள், 16 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) சுனில் நரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து விருத்திமான் சஹா, ஷான் மார்ஷ்சுடன் ஜோடி சேர்ந்தார். பவர் பிளே ஓவரில் (முதல் 6 ஓவர்களில்) பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் திரட்டியது.

கிரான்ட்ஹோம் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் விளாசிய ஷான் மார்ஷ் (11 ரன்கள், 10 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) அடுத்த ஓவரில் கிறிஸ் வோக்ஸ் பந்தை அடித்து ஆடினார். ஆனால் பந்து இன்சைடு எட்ஜ் ஆகி ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து கேப்டன் மேக்ஸ்வெல், விருத்திமான் சஹாவுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். கிரான்ட்ஹோம் வீசிய ஒரு ஓவரில் மேக்ஸ்வெல் 2 சிக்சர் தூக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார். 13.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்னை எட்டியது.

அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல், குல்தீப் வீசிய ஓவரில் (16–வது ஓவரில்) முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தையும் அடித்து ஆட முயல அதனை கிறிஸ் வோக்ஸ் அருமையாக கேட்ச் செய்தார். மேக்ஸ்வெல் 25 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். மேக்ஸ்வெல்–விருத்திமான் சஹா இணை 4–வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது.

அடித்து ஆடிய விருத்திமான் சஹா (38 ரன்கள், 33 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) குல்தீப் யாதவ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு பெவிலியன் திரும்பினார். அடுத்து ஸ்வப்னில் சிங் (2 ரன்) கிறிஸ்வோக்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அக்‌ஷர் பட்டேல் 8 ரன்னுடனும் (10 பந்துகளில்), ராகுல் திவேதியா 15 ரன்னுடனும் (8 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். முதல் 10 ஓவரில் 63 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி கடைசி 10 ஓவர்களில் 104 ரன்கள் திரட்டியது. கொல்கத்தா அணி தரப்பில் கிறிஸ்வோக்ஸ், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், சுனில் நரின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 52 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன் எடுத்து ரன்–அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் திவேதியா, மொகித் ‌ஷர்மா தலா 2 விக்கெட்டும், மேட் ஹென்றி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

12–வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி 6–வது வெற்றியை தனதாக்கியதுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. 13–வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி 5–வது தோல்வியை சந்தித்தாலும் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் தொடருகிறது.

adresponsive_1


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்
adresponsive_4